சனி, 18 ஜனவரி, 2014

கி(ழ)ளவர் நைனா...

“அம்புட்டுத்தான்... இதுக்கு மேல சோறுன்னு ஒன்னு ஒலகத்துல கெடைக்காது....” ன்னா நீங்க என்னா பண்ணுவீங்க...? அதேதான்... அதத்தான் நானும் பண்ணினேன்... வழக்கமா மூக்கு முட்ட சாப்புடுறவன்... அன்னைக்கி மூளை முட்ட சாப்புட்டேன்.

பொறவு...? பொறவென்ன... பொட்டப் புள்ளைக பொசுக்குன்னு சட்டையில முத்தங்குடுத்து... படக்குன்னு மேல மாட்டி வுட்டாக...
!!!? என்னா பாக்குறீக...? எனக்கு இல்ல மக்கா... அந்தக் கருவாப்பய சிவ கார்த்திகேயப் பொடியனுக்குத்தான்...! என்னைய மாறியே தொல்லைக்காட்சியில அதப் பாத்துக்கிட்டு இருந்தவிங்களுக்கு, சகல துவாரங்கள் வழியாவும் புகை வந்துச்சு பாருங்க, அதுமாறிலாம் எனக்கு வர்லன்னு சொன்னா, நீங்க நம்பவா போறீங்க...? சரி... அத விடுங்க...

அப்பத்தான் திடீர்னு அந்த போனு வந்துச்சு... ஒடனே “போனு எப்புடி ஒன்னத் தேடி வந்துச்சு”ன்னு நீங்க கேக்கப்புடாது... “ஊர் உறங்கியது...” ன்னு சொன்னா “ஊர் தூங்குச்சு”ன்னு அர்த்தமில்ல... “ஊருல இருக்க மக்கள் தான் தூங்குனாங்க...”ன்னு அர்த்தம்... அதுமாறித்தான் இதுவும். போனு வந்துச்சுன்னா “தொல்லைபேசி மணி அடிச்சுச்சு”
ன்னு அர்த்தம்.

படக்குன்னு எடுத்து “அலோ...” ன்னு நான் தமிழ்ல தாங்க பேசுனேன்... ஆனா பாருங்க, அந்தப் பக்கம் பேசுன பிக்காலிப்பய, “கோன் பனேகா கொரோர் பதி..”ன்னு கிந்தில பேச ஆரம்பிச்சுட்டான். எனக்கு வந்த ஆத்
திரத்துல “அப்புடியே அவன அலேக்காத் தூக்கி மல்லாக்கப் போட்டு ஒரு மிதி மிதிச்சா என்ன...?” ன்னு தோன... நல்ல வேளை, நான் நெனச்சது அவனுக்குக் கேட்டுருச்சு போல... ஒழுக்கமா தமிழ்லயே பேச ஆரம்பிச்சுட்டான்...
 

“நாங்க டெல்லில இருந்து பேசுறோம்... மேலிடத்துல இருந்து நைனா கிட்ட பேசுங்கன்னு தகவல் வந்துச்சு...” ன்னான்.

“இங்க பார்ரா... டெல்லில இருந்து யாரோ நம்மகிட்ட பேசச் சொல்லிருக்காய்ங்க...” ன்னு நெனச்சுக்கிட்டு, “ஓஹோ... அப்புடியா... நைனாதான் பேசுறேன்... சொல்லுங்க...”ன்னு சொன்னேன்.


“இங்கிட்டு மழை இல்ல... அங்கிட்டு...?” ன்னு சம்பந்தம் இல்லாம ஒரு கேள்வியக் கேட்டாம் பாருங்க...


“சரி... குசலம் விசாரிக்கிறாய்ங்க போல...
ன்னு நெனச்சுக்கிட்டு, “இங்கயும் மழை இல்ல... ன்னு சொல்லி வச்சேன்.

“நல்லது... நாங்க ஐந்நூறு ‘சி’க்கு ஒத்துக்குறோம்... நீங்க திரும்பவும் நம்ப கூடத்தான் கூட்டணின்னு அறிவிக்கணும்... கோர்ட்டு கேசெல்லாம் பத்தி இப்ப பேச வேணாம்... அதெல்லாம் பின்னால  பாத்துக்கலாம்... என்ன...? ஒங்களுக்கு ஒகே தான...?”ன்னு ரொம்பக் கராறாச் சொ
ன்னான் அந்தாளு.

எனக்குக் கொஞ்சம் கடியாத்தான் போச்சு...


“யோவ்... யாருய்யா நீங்கள்லாம்...? நீங்க பாட்டுக்கு கூட்டணிங்கிறிங்க... ‘சி’கிறிங்க... கோர்ட்டு கேசுன்னு சொல்லறீங்க... ஒங்களுக்கு என்ன வேணும்...?”ன்னு ஒரு மெரட்டு மெரட்டவும்... நெசமாவே அவிங்க பயந்து தான் போய்ட்டாய்ங்க போல...


“ஐயா... நீங்க தான நைனா...?” ன்னு கொஞ்சம் பவ்யமா கேட்டான் அந்தாளு...


“அதான பாத்தேன்... நமக்குப் பயப்புடுலன்னா எப்புடி...” ன்னு நெனச்சிக்கிட்டு, “ஆமா நாந்தான் நைனா... ஒங்களுக்கு என்ன வேணும்...” ன்னு கொஞ்சம் கடுமையாவே கேட்டேன்.


“இல்ல ஐயா... கோடு வேர்ட் லாம் கரெக்ட்டா சொல்லிட்டீங்க... ஆனா... மெயின் மேட்டர் பேசுறப்பத்தான் புரியாதது மாறியே பேசுறீங்க... அதான்... ஒரே கொழப்பமா இருக்கு...” ன்னு திருப்பியும் வெளக்கெண்ணை மாறி கொழ கொழன்னே பேசுனான் மேற்படி ஆளு.


நல்ல வேளை, ஏதோ நாங்கொஞ்சம் உசாரான ஆளா இருக்கப் போயி தப்பிச்சுக்கிட்டேன்... இல்லாங்காட்டி, எங்கதி...? “கூட்டணி... சி... அறிவிப்பு...” ன்னு போறப்பவே ஏதோ இது அரசியல் மற்றும் அரசியல் வியாதிகள் சம்பந்தப் பட்ட விசயமுன்னு புரிஞ்சுபோச்சு...


“அடடே... விசயம் அப்புடிப் போகுதா... ஐயா... நீங்க நெனைக்கிற நைனா நா இல்ல... நா முட்டா நைனா... நீங்க சொல்றவர்... கி(ழ)
வர் நைனா... ன்னு தமிழும் ஆங்கிலமும் கலந்து சிலேடையா சொன்னேன்.

நாஞ்சொன்னது அவனுக்குப் புரிஞ்சு போச்சோ என்னமோ... “சாரிங்க... ராங் நம்பர்...” ன்னு சொல்லிட்டு படக்குன்னு போன வச்சுப்புட்டான்...


“ஏதேது... நம்ப பேரு அரசியல் அரங்கு வரைக்கும் போயிருச்சா...” ன்னு நெனச்சுக்கிட்டே, சைடு வாங்கி சாஞ்சு ஒக்காந்தேன் பாருங்க... அப்பத்தான்... அந்த சத்தம் கேட்டுச்சு... என்னடான்னு பாத்தாக்க... சர்ர்ர்... சர்ர்ருன்னு... நாலஞ்சு ஆட்டோக்கள் வந்து என் வீட்டு முன்னாடி நிக்கிது... “போச்சுடா... போன வக்கிறதுக்குள்ள... எவனோ போட்டுக் குடுத்துட்டான் போல... அதான் ஆட்டோ அனுப்பி... ஆளத் தூக்க வந்துட்டாய்ங்க...” ன்னு பாத்தாக்க...


வங்கிலருந்து வேல முடிஞ்சு, வீட்டுக்குப் போற அதிகாரிங்க மாறி நாலஞ்சு பேரு திமுதிமுன்னு வீட்டுக்குள்ள வந்தாய்ங்க பாருங்க... நான் அப்புடியே ஆடிப்போய்ட்டேன்...


“ஹலோ... நாந்தான் இன்னாரு... அதென்ன சார் ஒங்க பேரு... சொல்றப்பவே ஒரு மாதிரி இருக்கு...? எழுதிப் பாத்தா... வாந்தி வாந்தியா வருது...” ன்னாரு மேனஜரு மாறி இருந்த ஒருத்தர்...


ஒன்னும் புரியாம நான் ங்ங்ஞே...ன்னு முழிக்கவும்...

பாக்குறதுக்கு டாக்குட்டரு மாறி இருந்தவரு... “யோவ்... ஒன்னால என்னாச்சு தெரியுமா...? ஒலகத்துல இருக்க எல்லா நைனாவும் முட்டாப்பயகதான்னு சொல்றான்யா என் பையன்...” ன்னு எகுற...


கைல பெரம்போட வாத்தியாரு மாறி நின்ன ஒருத்தர் “யோவ் நைனா... ஒன்னப் பாத்தா அப்புடி ஒன்னும் லூசு மாறி தெரியலையேய்யா... அப்புறம் ஏன்யா முட்டா நைனான்னு பேரு வச்சுருக்க... இதுல எதுனா உள்குத்து இருக்கா...” ன்னு கேக்கவும்தான்... 


எனக்கு ஒரு மாதிரியா புரிய ஆரம்பிச்சுச்சு... “சர்தான்... நம்ப பேரப் பத்தித்தான் இவுக எல்லாரும் பேசிக்கிறாக...” ன்னு.

“என்ன மக்கா... நாஞ்சொல்லவர்றத புரிஞ்சுக்கிட்டீங்களா...?” அதேதான்... அதேதான்...


“நான் ஏன் ‘முட்டா நைனா’ன்னு பேர் வச்சுக்கிட்டேன்...?” ன்னு அவுங்ககிட்ட எப்புடி வெளக்குனேனோ... அதைத்தான் ஒங்ககிட்ட புளி போட்டு வெளக்கப் போறேன்... கவனமாக் கேட்டுக்கங்க மக்கா...


அதுக்கு முன்னாடி நீங்க ஒரு தபா அல்லாருக்கும் வணக்கம்பா... ங்கிற என்னோட மொதல் பதிவப் படிச்சிட்டு வந்துருங்க... அப்பத்தான் சுளுவா இருக்கும்...


சின்ன வயசுல “மரக்கா மண்டையன்...”
, “வெடச்ச மூக்கன்...” ங்கிறது மாறி நெறையப் பட்டப் பேரு எனக்கு இருந்தாலும், கல்லூரிக்கு வந்ததுக்கு அப்புறம், எனக்குத் தெரிஞ்சு, எனக்கே எனக்குன்னு ஒரு பட்டப் பேரு வாய்க்கல. ஒரு வேளை, எனக்குத் தெரியாம எதுனா வச்சிருந்தாய்ங்களான்னும் எனக்குத் தெரியலை...

யாகூ மெஸ்சஞ்சர் பிரபலமா இருந்த நேரத்துல... “என்னப்பா... வாப்பா... போப்பா...” ன்னு தங்லீஸ்ல தட்டச்சு பண்ணிக்கிட்டு இருந்தது... நாளடைவில... “என்னபா... வாபா... போபா...” ன்னு மருவி... கடைசில “வா நைனா... போ நைனா...” ன்னு சென்னை செந்தமிழுக்கு மாறிருச்சு...


அதுக்கப்புறமா, நான் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புறப்பவோ இல்ல சாட் செய்றப்பவோ... “இன்னா நைனா... எப்புடி கீற....” ன்னு நைனா மொழிய அதிகமா பிரயோகப்படுத்த ஆரம்பிச்சேன்... அப்புடிப் பேசிக்கிறப்ப, லூசு மாறி, அடிக்கடி அவிங்கள்ட்ட எதுனா கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பேன்... அப்படி ஒரு நாள் நான் ஒரு கேள்வி கேக்கப்போய்... “யூ... முட்டா நைனா... அது அப்புடி இல்ல... இப்புடி...” ன்னு வெளக்கிச் சொன்னான் ஒரு நண்பன்... இப்புடித்தான், இந்த “முட்டா நைனா...” ங்கிற சொல் பிரயோகம் மொத மொத இந்த ஒலகத்துக்கு அறிமுகமாச்சு...


அதுக்கப்புறம், என்னோட கல்லூரி நண்பர்களோட யாகூ குழுமத்துல கொஞ்ச நாள், எங்களோட கல்லூரி நாட்களைப் பத்துன தொடர் ஒன்னை எழுதிக்கிட்டிருந்தேன்... அந்த சமயத்துல தான் இந்த “முட்டா நைனா” ங்கிற பதத்தை என்னோடைய அடையாளமா உபயோகப் படுத்த ஆரம்பிச்சேன்.


கல்லூரியில யார் யாருக்கு என்ன பட்டப் பேர் வச்சுக் கூப்புட்டோம்ன்னு  வெலாவாரியா ஒரு பதிவு போடவேண்டி இருந்துச்சு... அந்த சமயத்துலதான் மேல சொன்னாப்புடி, அப்புடியாக்கொந்த பட்டப்பேர் ஏதும் எனக்கு வைக்கலேன்னு தெரிஞ்சது. பேசாம “முட்டா நைனா”ங்கிற பேரையே எனக்கு வச்சுக்கலாம்னு எல்லாரும் பேசி முடிவு பண்ணினாய்ங்க.


கடைசில... மேற்படி, வலைப்பதிவு ஆரம்பிக்கிறப்பத்தான், திருப்பியும் இந்தப் பேச்சு வந்துச்சு. என்னோட கல்லூரித் தரப்பு நண்பேங்கள்லாம்,
நீ பேசாம முட்டா நைனாங்கிற  பேர்லேயே எழுதலாம்...” ன்னு பச்சைக் கொடியைக் காட்டுனாய்ங்க. ஆனா, இன்னோரு தரப்போ, முதல் கோணல் முற்றிலும் கோணலாகி போயிரும்... அதுனால, மொத தடவ இப்புடி ஒரு முயற்சி செய்றப்ப, தொலை நோக்காகச் சிந்திச்சு, ஒன்னோட பலம் எதுவோ அதுக்குத் தகுந்தாப்புடி, ரொம்ப நாளைக்கி நின்னு நெலைக்கிற ஒரு பேரை வச்சுக்க...” ன்னு  சொன்னாய்ங்க.
 
அவிங்க சொல்லறதையும் தள்ளிட முடியல.... முக்கியமா, “நாளைக்கி சாகித்திய அக்காடமி, ஆஸ்காரு, புலிட்சர், நோபல் மற்றும் இன்னபிற விருதுகளை வாங்கப் போறப்பவும் சரி, வெளி ஒலகத்துல நாம அடையாளப் படுத்தப்படுறப்பவும் சரி, அது நல்லவெதமா இருக்கணும்ல...? குறிப்பா, நாளைக்கி, நாம சொல்ற ஒண்ணாங்கிளாஸ் கருத்தாகப்பட்டது, நாம வச்சிருக்க பேரால, எடுபடாமப் போயிறக்கூடாதுல...?” ன்னு பலமா யோசிக்க ஆரம்பிச்சேன்.


“சரி... இப்ப என்ன முடிவெடுக்குறது...?” ன்னு ஒரு குழப்பத்துல இருக்கப்பத்தான்... “மொதல்ல நீ என்ன விதமா எழுதப் போற...? ஒன்னோட பலம் என்ன...? எந்தத் தளத்துல நீ இயங்க அல்லது பயணம் செய்யப் போற...?” ன்னுல்லாம் யோசிச்சுப் பாத்ததன் விளைவா, “ஒரு சோதனை முயற்சியா, பொழுதுபோக்கா மொதல்ல எழுதிப் பாக்கலாம்” ன்னு முடிவு பண்ணுனேன்.


இதுல ரெண்டு வகையான பலனை நான் எதிர்பாத்தேன். ஒன்னு, “எந்தவகையான எழுத்து நமக்கு வசப்படுது...?” ன்னு பரிட்சை பண்ணிப் பாக்குறது... ரெண்டாவது,
நம்ம முயற்சிக்கு எந்தமாறியான வரவேற்பு இருக்கும்...?” ன்னு தெரிஞ்சுக்கறது. (மேலும், பொழுதுபோக்கா எழுதுறப்ப, குற்றம் குறை எதுனா இருந்துச்சுன்னா, “அது மொக்கை” ன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்... என்ன நாஞ்சொல்றது...?)

ஆக, இப்புடி ஒரு சோதனை முயற்சியா உண்டானதுதான்  இந்த “முட்டா நைனா” ங்கிற வலைப்பதிவு.


எதிர்பாத்தபடி,
எனக்கு என்ன வகையான எழுத்து வசப்படுதுன்னு இப்பத்தான் ஓரளவுக்குப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்கேன். மேற்கொண்டு, இந்தப் பரிசோதனைத் தொடரலாம்ன்னும் இருக்கேன்.

ஒருவேள, நான் எதிர்பார்த்த மாறி, எனக்குத் திருப்தி வர்ற பட்சத்துல, பட்டப் பேரில்லாம, புனைப் பேர்லையோ இல்ல சொந்தப் பேர்லையோ சமகால எழுத்துல எறங்கலாம். அப்புடி எதும் ஒத்துவரலைன்னா, இதையே தொடர்ந்து செய்யலாம்.


எப்புடின்னாலுஞ் சரி மக்கா... “இதுவர நீங்க எனக்குக் குடுத்து வர்ற ஊக்கத்தையும் ஆக்கத்தையும், தொடர்ந்து  குடுத்து, எனக்கு ஒரு வழியக் காட்டணும்...” ன்னு இந்தச் சமயத்துல ஒங்களக் கேட்டுக்கிறேம்ப்பா.


பின் குறிப்பு: “நைனா...” ங்கிறது சென்னைச் செந்தமிழைப் பொருத்தவரை, இசுலாமிய அன்பர்கள் தங்களுக்குள்ளே “வாங்க பாய்... போங்க பாய்...” ன்னு பாசமா சொல்லிக்கிறா மாறி, சாதாரண மக்களை விளிக்கிற சொல்லாவே கையாளப்படுது. அதுனால, “இந்த
நைனா வாகப் பட்டது, தந்தை... அப்பா... ங்கிற பதத்துல பயன்படுத்தப்படுறதக் காட்டிலும், சாதாரண மக்களை விளிப்பதற்குத்தான் பயன்படுது” ங்கிறது  அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம். ஒருவேள என்னோட அபிப்பிராயம் தப்பாக் கூட இருக்கலாம். ஆனா “முட்டா நைனா...” ங்கிற பதம் “முட்டாள் தந்தை/அப்பா” ங்கிற அர்த்தத்துல உபயோகப் படுத்தப் படலை. அது நம்ம நோக்கமும் இல்ல. அதுக்குப் பதிலா, “ஒரு சாதாரண முட்டாள்” ங்கிற அர்த்தத்துலயே பயன்படுத்தப் படணும்னு எதிர்பாக்குறேன். அதுனால, “தந்தையரை இழிவு செய்யுற நோக்குல இப்பதம் கையாளப்படலை...” ங்கிறத நான் இந்தச் சமயத்துல ஒங்களுக்குச் சொல்லிக்கிறக் கடமைப்பட்டுருக்கேன்.

“எனது இந்தக் கருத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்...? முட்டா நைனா என்ற பதம் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா...? இல்லையென்றால், வேறு பெயரில் நான் தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்களா...?” ங்கிறதப் பின்னூட்டம் வாயிலாத் தெரியப்படுத்துனா ரொம்ப ஒதவியா இருக்கும்.


அப்பால ஒரு பின் குறிப்பு: என்னோட பதிவுகள மூஞ்சியக் காட்டாம படிச்சுவரும்
மௌன வாசகக் கண்மணிகளுக்கு மொதல்ல என்னோட நன்றியத் தெரிவிச்சுக்கிட்டு, ஒங்கள்ட்ட ஒரு வேண்டுகோள வக்கிறேன்... என்னோட இந்த முயற்சி பத்தி ஒங்களுக்குத் தோனும் விமரிசனங்கள தயை கூர்ந்து, பின்னூட்டம் வாயிலா (பெயரிலியா இருந்தாலும் பரவால்ல...) தெரியப்படுத்தனும்னு அன்போட வேண்டிக் கேட்டுக்கிறேன். நிச்சயம் அதெல்லாம் எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். 

நன்றி...!


27 கருத்துகள்:

  1. அலோ... மைக் டெஸ்டிங்... ஒன்... டூ... த்ரீ...

    பதிலளிநீக்கு
  2. லோ... மைக் டெஸ்டிங்... ஒன்... டூ... த்ரீ...போர்...
    தமிழ்மணம் +1

    பதிலளிநீக்கு
  3. பின் குறிப்பு விளக்கம் சரி... ஆனால் புதிதாக வரும் அன்பர்களுக்கு தெரியாதே... ஒவ்வொரு பதிவிலும் பின் குறிப்பு வருமா...? அன்புடன் DD

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி... "சுய விவரத்தில்" போட்டுவிடலாம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி 2டி...!

      நீக்கு
  4. நைனா ங்கிற பேரே ஷோக்கா த்தான் கீது.. அதே இருக்கட்டும் நைனா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புடிச் சொல்லுதியாபா... சர்தாம்பா... அப்புடிக்காவே வச்சுக்கலாம்பா....

      நீக்கு
  5. இன்னாத்திக்குபா நீ டென்ஸனாவுற!
    உன்க்கு இன்னா தெர்தோ அத்த எய்து. நீ இன்னாத்தே கீச்சாலும் அத்தய் மறுவாக்கி கீய்க்க ரொம்பபேர் ரெடியாகீறாங்க. பாரு டீடீ அன்னாத்தேக்கு எப்படியெல்லா டவுட் வர்துன்னு.
    ஸோ... டோன்ட் வொரீ... பீ ஹாப்பீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா... நீ காண்டி குட்க்குற ஊக்கம் கீதே அத்து படா பெர்சுபா...

      நீக்கு
  6. வணக்கம்

    தங்களின் பெயருக்கான விளக்கம் இன்றுதான் கிடைத்துள்ளது... (நைனா....)என்று வந்தால் நன்று....
    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி ரூபன்...!

      நீக்கு
  7. செரியாப் போச்சு.... நாலு பேராண்ட கருத்துக கேட்டயின்னா, அவுங்க நாப்பது சொல்லுவாங்க... ஒன் மனசுக்குத் தோணுறதச் செய்யி நைனா! முட்டா நைனாங்கற பேரே ஸோக்காத் தான் கீது! கிள(ழ)வர் நைனாவால பட்ட பாட்டை ரசிச்சேன்! அப்புறம்... ஒரே ஆள் எப்படிய்யா ஆஸ்கார், நோபல், புலிட்ஸர்லாம் வாங்க முடியும்? ங்ங்ங்ஙே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா...

      அய்யே... அப்ப ஒரே ஆளுக்கு அல்லா அவார்டும் குட்க மாட்டாங்களா...? இன்னாபா ஒரே அன்யாயமா கீது...?

      நீக்கு
  8. என்ன மூட்டா நைனா நீ தளம் நடத்துறியா சீக்ரெட்டா சொல்லி அனுப்பிச்சா இந்த நைனாவும் வந்து உங்கூட சவுண்டு கொடுத்திருப்பான்ல. ஆமாம் என்ன நைனா நான் உன்னோட ஃப்ளோவரா இணையலாமுனு நினைச்சு சேர்ந்தா இப்படி பதில் வருது

    மன்னிக்கவும்...

    உங்கள் கோரிக்கையை எங்களால் கையாள முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்க அல்லது சிறிதுநேரம் கழித்து திரும்பி வருக.

    என்னை நைனாஅ என்னை ப்ளாக் பண்ணி வைச்சிருக்கியா என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோ... நஹி... நெவெர் பர்கெட்... ஐ நோ ப்ளாக் யூ...

      இக்கும்பா... இன்னான்னு தெர்லபா... பிளாக்கர்ல ஏதோ கோளாரு போலபா... இன்னான்னு பாக்றேம்பா...

      இப்போதக்கி கூகிள் பிளஸ்ல ஜாயிண்டு பண்ணிக்லாம்பா...

      நீக்கு
    2. கூகிள் பிரண்ட் கனெக்டர் புச்சா போட்டுக்கீறேம்பா... இப்ப ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுபா...

      நீக்கு
  9. நாசருக்கு noseதான் தனித்துவம் ,உங்களுக்கு முட்டா நைனா தனித்துவம் ,அதை ஏன் விடணும்?
    என் வோட்டு இதுக்குத்தான் !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா... அப்புடியே ஆவட்டும்பா...

      நீக்கு
  10. வித்தியாசமா இருக்கு நைனா! அப்படியே இருக்கட்டும்.தமாசா எழுதறதுக்கு அதுதான் மேட்சா இருக்கும். கலக்குநைனா . என் வோட்டு குத்திட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. முட்டா நைனாங்குர பேர் தான் உனக்கு ரொம்ப கரெக்டா இருக்கும்பா.

    பதிலளிநீக்கு
  12. நல்லாக்கீதுபா வெளக்கம்! தொடர்ந்து இந்தப் பக்கமா வ்ந்துருவோம்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா... அப்பால வாப்பா பேசிக்லாம்...

      நீக்கு
  13. முட்டா நைனா விளக்கம் நல்லாத்தான் இருக்கு. அத படிச்சப்புறம் "முட்டா நைனா ஷோக்காத்தான் கீதுபா. அதுலயே எய்துபா. நீ இன்னா மேட்டர் வுட்டாலும், அடிச்சாலும் நாங்கல்லாம் பட்கிறோம்பா....சும்மா பூந்து விளாடுபா

    அல்லாம் போட்டாச்சுபா!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...