ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - முன்னுரை...


த்துப் பைசாவுக்கு மேல் பார்த்தறியாத பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய் பிச்சை கிடைத்தது போல, பஞ்சம் பிழைக்க பரதேசியாய்ப் போன எனக்குச் சொந்த ஊருக்குச் செல்லும் பாக்கியம் சென்ற விடுமுறையில் கிட்டியது. சொந்த ஊருக்குச் செல்வது சுற்றுலா போவது போலத்தான் போலும். சுற்றுவட்டாரத்தில் உள்ள சொந்த பந்தங்களைப் பார்த்து முடிப்பதற்குள் விடுமுறை முடிந்து விட்டது.

ஒதுக்குப் புறமாக இருந்த இடத்திலெல்லாம் வீடுகள் முளைத்து வீங்கிப் போய்க் கிடந்தது கிராமம். வீதிகளெல்லாம் சிமெண்ட் பூசிக்கொண்டு தடித்துப் போய்க் கிடந்தன. தெருவிற்குத் தெரு, வீட்டிற்கு வீடு தண்ணீர்க் குழாய் இணைப்பு தாராளமாய்க் காணப்பட்டது. நிறைய புதிய மனிதர்கள் காணக்கிடைத்தார்கள். ஏதோ, வேற்று ஊருக்குள் நுழைந்ததைப் போல் உணர்ந்தேன்.

தொளதொள பெல் பாட்டம், உடலோடு ஒட்டி உறவாடும் கழுதைக் காது காலர், தடிமனான மூக்குக்கண்ணாடி, சுருள் முடி கிராப் சகிதம் பாக்கியராஜ் ஸ்டைலில், நான் சிறு வயதில் பார்த்த எங்கள் ஆறாம் வகுப்பு ஆசிரியர், முதுமை எய்தி ஓடிசலான தேகத்தோடு, ஆற்றோர தென்னந்தோப்பில் கயிற்றுக் கட்டிலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

“ஆமா காள, ஊருக்குள்ள இருந்து அவிங்களோட ஓரியாட முடியலை. எந்த வம்புக்கும் போவாம இப்புடி தனியா இருக்குறது தான் நல்லா இருக்கு...” என்றார்.

புதிதாக வேயப் பட்டிருக்கும் கீற்றுக் கொட்டகையைத் தவிர, கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. நாங்கள் படிக்கும்போது தொங்கிக் கொண்டிருந்த தண்டவாள மணி இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் தந்த சீருடைகளில் ஆரவாரமாக ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகள்.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் உறவுக்கார ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. ஓய்வை எதிர்நோக்கி இருப்பவர், சமச்சீர் கல்வி முறையின் தாக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

மாணவர்களின் செயல்பாடுகளை குறிப்பேடுகளில் எழுதி வைத்த நிலை மாறி,  அவற்றையெல்லாம் கணினியில் தரவேற்றி,  தகவல் வட்டுகளில் பதிவு செய்து வைக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறதாம். அதற்காகத் தனியாகக் கணினிப் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

மவுசுன்னா என்னா? அத எப்புடி பயன்படுத்துறதுன்னு புரிஞ்சுக்கிறது ரொம்பச் செரமமா இருக்கு...” என்றவர், தன்னை விட ஆறாவது படிக்கும் தனது பேரப் பிள்ளைகள் கணினியைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்று கூறினார்.

பட்டிணத்துப் பள்ளிகளுக்கும் பட்டிக்காட்டுப் பள்ளிக்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் பற்றிப் பேசியவர், பேச்சினிடையே, ஒரு ஆங்கில வார்த்தையைக் கூறி, “இதுக்கு என்னா அர்த்தம்னு எனக்கு இவ்வளவு நாளாத் தெரியாது. பேரப் புள்ளைங்களுக்கிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்...”  என்று கூறினார். சற்று வியப்பாகத்தான் இருந்தது.

அவருடைய இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப் பட்டதுதான் "கேட்டானே ஒரு கேள்வி". இதில் நீங்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டியது, ஆசிரியப் பணியைப் பற்றியோ, ஆசிரியர்களைப் பற்றியோ குறைவாக மதிப்பிட்டு இதை உருவாக்கவில்லை. அது நமது நோக்கமல்ல. உண்மை அனுபவம் மற்றும் எதார்த்தம் இவற்றின் அடிப்படையிலேயே இதை அமைத்திருக்கின்றேன். குறிப்பாக, பட்டிணத்துக் கல்விக்கும் கிராமத்துக் கல்விக்கும் இடையேயுள்ள, மலைக்கும் மடுவுக்குமான, வித்தியாசத்தைப் பிரதிபலிப்பதே இதன் நோக்கம்.

இந்நோக்கத்தை உணர்ந்து இப்புனைவை உள்வாங்கிக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அதையும் மீறி உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல...

இனி... கேட்டானே ஒரு கேள்வி...
விரைவில்...26 கருத்துகள்:

 1. முட்டா நைனா விரைவில் என்று முடித்துவிட்டு இப்படி தமிழக அரசு பஸ்ஸாக ஸ்லோவாக வருகிறீர்களே நியாயமா?

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. மைக் டெஸ்ட் பண்றதுக்குள்ள மானா தானா முந்திக்கினாரே... ரெம்ப டேங்க்ஸ்பா...

   நீக்கு
 3. பட்டிணத்துக் கல்விக்கும் கிராமத்துக் கல்விக்கும் இடையேயுள்ள, மலைக்கும் மடுவுக்குமான, வித்தியாசத்தைப் பிரதிபலிப்பதே இதன் நோக்கம்.//சரியான மதிப்பீடு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிஞர் ஐயா...!

   நீக்கு
 4. தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை... தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 5. #நாங்கள் படிக்கும்போது தொங்கிக் கொண்டிருந்த தண்டவாள மணி இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.#
  இந்த தண்டவாளத்தை என்று மாற்றுகிறார்களோ,அன்றுதான் கிராமத்து பள்ளிகள் முன்னேற நிதி ஒதுக்குகிறார்கள்,அது உருப்படியாய் வந்து சேர்ந்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும் !
  த ம 4

  பதிலளிநீக்கு
 6. பட்டிணத்துக் கல்விக்கும் கிராமத்துக் கல்விக்கும் இடையேயுள்ள, மலைக்கும் மடுவுக்குமான, வித்தியாசத்தைப் பிரதிபலிப்பதே இதன் நோக்கம்.// அந்த் பிரதிபலிப்பை விரைவில் கொண்டு வாருங்கள்! நைனா!! நல்லதொரு ஆரம்பம்! அடுத்தது எப்போது?? கேட்டேனே ஒரு கேள்வி!?!

  த.ம. அல்லாம் போட்டாச்சு!!!

  பதிலளிநீக்கு
 7. கேட்டானே ஒரு கேள்வி.... படிக்கும் ஆவலுடன் நானும்....

  அல்லாம் போட்டாச்சு நைனா!

  பதிலளிநீக்கு
 8. கேளுங்க... நல்லா கேளுங்க!
  நல்லா கேட்டு தெளிஞ்சா பரவாயில்லை.
  அதை விட்டுவிட்டு வெரும் கேட்போம், பதிலபத்தியெல்லாம் கவல படமாட்டோம் என்று இருக்காதீங்க.
  "கேள்வி பிறந்தது அன்று...
  நல்ல பதில் பிறந்தது இன்று..." என்று ஆடிப்பாடுவோம் வாங்க!

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள்! 7 வது வோட்டு!
  உங்கள் பதிவு வாசகர் பரிந்துரியைல் வந்ததற்கு வாழ்த்துக்கள்
  இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்--மென் மேலும் வளர்க!

  பதிலளிநீக்கு
 10. சூப்பர் நைனா... ஆவலோடு அடுத்த பதிவிற்கு காத்துருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 11. இன்னாவோனா எய்துபா, ஒன்நியம் குத்தமில்ல.

  அல்லாம் போட்டாச்சு.

  பதிலளிநீக்கு
 12. உண்மைதான்! பிள்ளைகள் நிறைய தெரிந்து வைத்துள்ளார்கள் நம்மைவிட! முதல் வருகை! இனி தொடர்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேசு...!

   நீக்கு
 13. மாணவர்கள் பற்றிய மதிப்பீடுகளை ஆசிரியர்கள் இப்பல்லாம் கணிப்பொறியில பதியறாங்களா? இந்தத் தகவலே எனக்குப் புதுசு தாம்ப்பா! நீங்க எழுதறதுல ஆட்சேபிக்க எதுவும் இருக்காதுன்றது என் நம்பிக்கை. தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...