சனி, 10 மே, 2014

ரெம்பச் சின்னப்புள்ளத்தனமால்ல கீது...?!

“அல்லாம் இந்த துலுக்காணத்தால வந்ததுபா...”

“ஏலே... என்னலே... என்ன சொல்லுத...?” ன்னாரு நம்ப கடையாண்ட வந்த அண்ணாச்சி...

“பின்ன இன்னா அண்த்தே... நம்ப துலுக்காணம் கீறானே... அன்னிக்கி  நம்ப கடையாண்ட வந்து... இன்னா சொல்லிக்கினான் தெர்யுமா...?”

“என்னலே சொன்னான்...?”

வாத்யாரே... எலிக்சன் முட்ஞ்சி ரிசல்ட்டு வுடங்காட்டியும் ரெம்ப பேஜார் பண்ணிக்கிறான்பா கவுருமண்டுல... நீ காண்டி ரெம்ப உசாரா இர்ந்த்துக்கபா... ன்னான்.

இன்னாபா... இன்னா மேட்டரு...? ன்னு கேட்டுக்கினேன் அண்த்தே... அத்துக்கு அவன் இன்னான்றான்...”

“இந்த மேரி வாத்யாரே... நம்ப பையனுக்காண்டி ஒரு பெர்த்து சட்டியேட்டு வாங்கின்லாம்ன்னு தாலுக்கா ஆபீசாண்ட போய்க்கினேம்பா... கசுமாலம் அவன் இன்னான்றான்... இந்த மேரி... இந்த மேரி... எலிக்சன் டைமு... இப்ப ஒன்னியும் கெடியாது... அப்பால வா... பாத்துக்லான்றான்... சர்தாம்பான்னு சொல்லிக்கினு... பத்தர ஆபீசாண்ட போயி... வூட்டுமேல பட்டா குடுடா பேமானின்னு கேட்டுக்கினா... அத்துக்கு அந்த பொறம்போக்கு இன்னான்றான்...  இந்த மேரி... இந்த மேரி... எலிக்சன் டைமு... இப்ப ஒன்னியும் கெடியாது... அப்பால வா... பாத்துக்லான்றான்...”

“இன்னாபா இத்து அநியாயமா கீதே...?”

“கேளு வாத்யாரே... நா காண்டி இல்ல... யாரு போய்க் கேட்டுக்கினாலும்... அல்லா ஆபீசுலயும்... இத்தேதான் சொல்லிக்கினுகீறாய்ங்கலாம்... ரெம்ப மெர்சலா கீதுபா...”

“அட சோமாரிங்களா... கஸ்டமருகாண்டி இல்லாதே... பின்ன யாருக்காண்டி கட வச்சுக்கினுகீறாய்ங்க...?”

“அட இத்து பர்வால்ல வாத்யாரே... நம்ப பக்கிரி கத கீதே... அத்து ரெம்ப பேஜாருபா...”

“இன்னாபா சொல்லிக்கிற...?”

“கேளு வாத்யாரே... எலிக்சனுக்கு மொத நா... நம்ப பக்கிரி நாஸ்தா துண்ணலாம்னு கெய்வி கடையாண்ட போய்னுறாம்பா... அந்தாண்ட வந்த எலிக்சன் ஆபீசரு... ஏய் கசுமாலம் எவ்ளோ துட்டு வச்சுனுகீற...? ன்னு கேட்டானாம்பா... அத்துக்கு இவன் சொல்லிக்கிறான்... இந்த மேரி ஆபீசர்... நாஸ்தா துண்ணுக்லாம்னு பாஞ்சி ரூவா கீதுன்னானாம்... அடிங்க... புரூப்பு இல்லாதே எப்புடி நீ துட்டு வச்சுக்லாம்...?
ன்னு சொல்லி... அந்த துட்ட இஸ்துக்கினு பூட்டானாம் அந்த ஆபீசரு...”

“அய்யே... இன்னாபா இத்து... கூத்தாக் கீது?”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி இன்னா பண்ணிக்கிறான்... எலிக்சன் பூத்தாண்ட போயி... ஏசன்ட்டு கைல ஓ...ன்னு அய்துக்கிறாம்பா... அத்துக்கு அந்த பொறம்போக்கு... நீ ஒன்னும் மெர்சலாவாத பக்கிரி... எலிக்சன் டைமுல அல்லாம் இப்புடிக்காதான் இர்க்கும்... நீ காண்டி இன்னா பண்ணு... எலிக்சன் அன்னிக்கி நம்ப கட்சிக்கி ஓட்டு போட்டுக்கினு... நேரா எலிக்சன் ஆபீசரண்ட போயி... தகுந்த ஆவணத்தோட துட்டக் கேளு... ஓங் கைல துட்டக் குட்த்துருவான்ன்னு சொல்லிக்கிறாம்பா...”

“ம்... அப்பால...”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி இன்னா பண்ணிக்கிறான்... எலிக்சன் அன்னிக்கி…  துட்டு வாங்கினதுக்கு ஒரு தபாவும்... ஏசன்ட்டு சொல்லிக்கினான்னு ஒரு தபாவுமா ரெண்டு தபா ஓட்டு போட்டுக்கினு... கொஞ்சம் மப்பையும் போட்டுக்கினு... நேரா... எலிக்சன் ஆபீசராண்ட போயி... தெனாவெட்டா ஒரு லுக்கு வுட்டு... இந்த ஆணவம் போதுமா...? இல்ல... இன்னுங்கொஞ்சம் வேணுமா...? ன்னு சொல்லி... எந் துட்டக் குடுறா பேமானின்னு கேட்டுனுக்றாம்பா... அவ்ளோதான்... அந்த ஆபீசரு காண்டாயி... கசுமாலம் யாராண்ட வந்து இன்னா கேட்டுக்கிற...? ன்னு... செவுள்ல ரெண்டு வுட்டு... டேசனாண்ட இட்டுக்கினு பூட்டானாம்பா...”

“அய்யே... இன்னாபா இத்து பேஜாராக் கீது...? அப்பால இன்னா ஆச்சி...?”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி சம்சாரம் இல்ல...? அத்து... நம்ப கைல வந்து... ஓ... ன்னு அய்வுதுபா... சர்தாம்மே அய்வாத... நம்ப ஏசன்ட்டு கைல சொல்லி... வெளிய இட்டாந்துர்லாம்மேன்னு சொல்லி... அப்பால... ஏசன்ட்டு கைல மேட்டர அவுத்து வுட்டு... பக்கிரிய ரிலீசு பண்ணிக்றதுக்குள்ள ரெம்பப் பேஜாராப் பூடிச்சிபா...”

“மெய்யாலுமே பேஜாராத்தான் கீதுபா...”

“கேளு வாத்யாரே... நாட்டு நெலவரம் ரெம்ப டரியலாக்கீது... நீ காண்டி உசாரா கடிய மூடிக்லேன்னா... அப்பால அம்பேல்தாம்பா... எலிக்சன் முட்ஞ்சி... ரிசல்ட்டு வுடங்காட்டியும் கடிய தொர்க்காதே வாத்யாரே...
ன்னு கண்டிசனா சொல்லிக்கினான் அண்த்தே...”

“ஓகோ... பொறவு நீ என்னலே பண்ண...?”

“நானும்... சர்தாம்பா... நமக்கு இன்னாத்துக்கு வம்பு...? ன்னு கடிய மூடிக்கினு வூட்டாண்ட குந்திக்கினேன் அண்த்தே...”

“சர்தாம்லே... பொறவு என்னலே ஆச்சு...?”

“அப்பால… ரெண்டு நா மின்னாடி.... டகால்னு வந்துக்கின துலுக்காணம்... வாத்யாரே... வாத்யாரே... இந்தா மேரி ரிசல்ட்டு வுட்டுட்டான் வாத்யாரே... ன்னு குஜாலா சொல்லிக்கினான் அண்த்தே... நானும் அவனாண்ட... சர்தாம்பா... ஒம் மச்சான் இன்னா ஆனான்...? னு கேட்டுன்னேன் அண்த்தே... அத்துக்கு அவன் இன்னான்றான்... வாத்யாரே... நம்ப மச்சான் சோக்காக் கெலிச்சுக்கினான்... அல்லாம் தவுசண்டுக்கு மேல ஏகிறிடிச்சுபா... ன்னு சொல்லி ஜூட் வுட்டுக்கினான் அண்த்தே... நானும்... சர்தாம்பா... அத்தான் அல்லாம் முட்ஞ்சிபோச்சேன்னு சொல்லி... கடிய தொர்ந்க்கினேன் அண்த்தே...”

“அதாம் கடையத் தொறந்துட்டல்ல... பொறவு என்னலே... பெனாத்திட்டுக் கெடக்கே...?”

“கேளு அண்த்தே... கடியாண்ட குந்திக்கினுகீறேன்... நம்ப கபாலி இல்ல கபாலி...? அந்தக் கசுமாலம் இன்னாடானாக்க... நாலு பேர கூட இஸ்துக்கினு வந்து...
இன்னான்றான்... இன்னா வாத்யாரே... ரிசல்ட்டு போடங்காட்டியும் கடிய தொர்ந்து வச்சிக்கினுகீற... கடிய அட்ச்சி ஒடிக்க சொல்லி தலிவர் சொல்லிக்கினாரு... நீ இன்னான்ற...?

“இன்னாபா சொல்லிக்ற...? நேத்திக்கே ரிசல்ட் வுட்டானாமே...?”

“எந்த பேமானி சொல்லிக்கினான்...?”

“நம்ப துலுக்காணந்தான் சொல்லிக்கினான்... அவன் மச்சான் கூட கெலிச்சுக்கினானாமே...?”

“அட சோமாரி... அத்து எலிக்சன் ரிசல்ட்டு இல்லபா... பிளஸ் டூ ரிசல்ட்டுபா...”

“இன்னாபா... சொல்லிக்கிற...? அப்ப அவன் மச்சான் கெலிச்சது...?”

“அட கசுமாலம்... எலிக்சன்ல நின்னுக்கினது அவன் மூத்த சம்சார வகையில மச்சாம்பா... ன்னு சொல்லி... காதக் கொண்டா வாத்யாரே... ன்னு எங் காதாண்ட குசுகுசுன்னு... பிளஸ் டூ ல கெலிச்சிக்கினது... அவனோட கடிசி செட்டப்பு வகையில மச்சாம்பா...ன்னு சொல்லி... கடிசில இன்னான்றான்...

“சர்தாம்பா... நீ நம்பாளா போய்க்கின... நா ஒன்னு சொல்றேன் கேளு... நா... ஓங்கடிய அட்ச்சி ஒட்ச்சா... ஒன்க்கும் புரோசனமில்ல... என்க்கும் புரோசனமில்ல... அத்துனால... நீ இன்னா பண்ணு... நம்ப கைல கொஞ்சமா மாலு வெட்டு... நா ஒன்னிய அடிக்றா மேரி அடிக்றேன்... நீயும் அய்வுறாமேரி அய்வு... அல்லாம் சர்யாபூடும்... இன்னான்றே நீ...?ன்னு கேட்டுக்கினான் அண்த்தே...”

“அடப் படுக்காளிப் பயலுவலா... என்னலே சொல்லுத...?”

“கேளு அண்த்தே... நானும் ரோசன பண்ணிப் பாக்க சொல்லோ... சர்தாம்பா... கடிய லாசு பண்ணிக்காமே... கபாலி கைல மாலு வெட்டி எஸ்கேப்பு ஆய்க்லாம்னு நென்ச்சி... அவன் கைல கொஞ்சம் மாலு வெட்டி... கடிய காவுந்து பண்ணிக்கினேன் அண்த்தே...” ன்னு நா சொல்லி மிடிக்க...

நம்பளே ஏற எறங்க லுக்கு வுட்ட அண்ணாச்சி...

“அடக் கோட்டிக்காரப் பயலே... என்னாலே நீ இம்புட்டு லூசா இருக்கே...? எலக்சன் டைம்ல கவுர்மண்டு ஆபீசுலதாம்லே எல்லா சோலியையும் நிப்பாட்டி வைப்பாம்... ஏ... ஒனக்கென்னலே வந்திச்சு...? பதிவுகளப் போட்டு
ட்டு போய்ட்டே இருப்பியா... அத விட்டுட்டு... எலக்சன் முடியிற வர பதிவு போடாம இருப்பேம்னு... இப்புடி மோசம் போயிட்டியேலே...” ன்றாரு...!

“ஏலே மக்கா... நா இன்னாத்தச் சொல்ல...? இத்து ரெம்பச் சின்னப்புள்ளத்தனமால்ல கீது...?!”


30 கருத்துகள்:

 1. அலோ... மைக் டெஸ்டிங்... ஒன்... டூ... த்ரீ...!

  பதிலளிநீக்கு
 2. மச்சான் கெலிச்சது மெய்யாலுமே பேஜாராத்தான் கீது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கும்பா... கடியாண்ட வந்து கர்த்து சொல்லி ஓட்டு போட்டுக்கினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...!

   நீக்கு
 3. இன்னா நைனா... இப்புடி பேஜாராப் பூட்டியே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கும்பா... இன்னா பண்றது...? இப்புடிக்கா ஆய்ப்பூடிச்சி... :-(

   நீக்கு
 4. ரொம்ப சின்னப்புள்ள தனமாத்தான் கீது முட்டா நைனா.

  எலெக்ஸன் நேரத்துல என்னமா பீலா வுடுறானுங்க.
  எதத்தொட்டாலுமா இப்பிடி பேசுவாங்க?
  எலெக்ஸன் முடிஞ்சிட்டா மட்டும்?

  அல்லாம் போட்டாச்சி.... போட்டாச்சி.  பதிலளிநீக்கு
 5. சத்தியமா நான் இதப் படிக்கவே இல்ல நைனா ஆனாலும்
  எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு :)))))))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... அப்பால வந்து பட்ச்சிக்கங்க... ஆனா... இப்ப இந்த நன்றிய புட்ச்சுக்கங்க...!

   நீக்கு
 6. நல்ல வேளை,எலிக்சன் டயத்திலே எந்த பதிவையும் படிக்கக்கூடாதுன்னுசொல்லாம போனாங்களே !
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கும்பா நல்ல வேளையாப் பூடிச்சி...!
   ரெம்ப டேங்க்ஸ்பா...!

   நீக்கு
 7. நைனா இன்னாபா! இலிக்சம் டைம்ல இதுங்கல்லாம் இப்படித்தானே மெர்சல் பண்ணுவானுங்க......அதுக்கா எய்தாம போவியா......இன்னாபா....அல்லாம் போட்டாச்சு போட்டாச்சுபா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னாபா பண்றது...? இத்து கூட தெர்யாம இர்ந்துக்கிறேம்பா...!
   ரெம்ப டேங்க்ஸ்பா...!

   நீக்கு
 8. இந்த மேரி அல்லாத்தையும் பட்ச்சேன். நல்லா இந்த்ச்சி.

  பதிலளிநீக்கு
 9. முட்டா நைனாவுக்கு சாமானியன் வண்க்கம் வக்கீறான்... வண்க்கம் வக்கிறான்...

  நைனா...இன்னாமா எழுதற நீயீ ? சூப்பர் வாத்யாரே ! மொதல்ல மெர்சலாகி அப்பூறமா டமாசாயிடிச்சீ நைனா !

  டைமிருந்தா இந்த பிஸ்கோத்து பையன் சாமானியன் குடிசையாண்ட வா நைனா !!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வண்க்கம்பா... வண்க்கம்...! மொத தபா வந்து கர்த்து சொல்லிக்கினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா..!

   அல்லாம் கண்டுக்கினேன்... கண்டுக்கினேன்...!

   நீக்கு
 10. முட்டா நைனா பாட்டு பாடுற பழக்கம் இருந்தா எங்க பாட்டப் பாடிப்
  பாத்துக்கீங்க இந்தாயா படு ஜோரா ஈக்கும் :))))
  http://rupika-rupika.blogspot.com/2014/05/blog-post_8959.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவட்டும்மே... கடியாண்ட வந்து கண்டுக்றேன்...

   நீக்கு
 11. தம்பி .. நீ முதல்ல madras'அ ?madras'லே தான் வளந்தியா .. இது எல்லாம் cinema'லே காட்டுர madras தமிழ் .. இன்னிக்கு தான் இதை பாத்தேன், கம்முணு உட்ருப்பேன் ஆனா அங்கேயே பொறந்து வளந்ததால என்னால சும்மா இருக்க முடியலை !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்கு இன்னா பண்றது அம்பு அண்ணாத்தே...! நீ சொன்னா மாறி எனக்கும் சென்னைத் தமிழுக்கும் 430 கிலோ மீட்டரு தூரம்... அல்லாம் கேள்வி ஞானந்தான்...!

   நீ ஒன்னும் மெர்சலாவாதபா... ஒன்னிய மாறி சென்னைத் தமிழ்ப் புலவர காண்டாக்குறதோ... இல்ல... சென்னைத் தமிழுக்கும் அதோட எலக்கிய வளத்துக்கும் இழுக்கு உண்டாக்குறதோ... நம்ப நோக்கம் இல்ல அண்ணாத்தே... ஜஸ்ட் டேக் இட் ஈசிபா...!

   மொத தபா நம்ப கடையாண்ட வந்து கர்த்து சொன்னதுக்கு ரெம்ப டேங்க்ஸ் அண்ணாத்தே... இதே மாறி... தொடர்ந்து வந்து நமக்கு ஊக்கம் அளிக்கணும்னு கேட்டுக்கிறேம்பா...

   நீக்கு
 12. எலக்ஷன் முடிஞ்சு மோடியும் வந்துட்டார் நம்ம நைனா வை காணோமே? யாராச்சும் பார்த்தீங்களா?
  நலமா சகா?

  பதிலளிநீக்கு
 13. நண்பரே !

  தங்கள் பெயரை ஒரு சுழற்சி முறை பதிவில் இணைத்துள்ளேன்... விபரங்களுக்கு என் வலைப்பூ பக்கம் வாருங்களேன் ! நன்றி

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 14. இன்னாச்சி நைனா ! மோடியாண்ட ஏதானாச்சும் மந்திரி பதவி வாங்கிக்கினு போயிட்டியா நைனா ?!

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  பதிலளிநீக்கு
 15. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  பதிலளிநீக்கு
 16. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 17. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 18. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...