சனி, 4 ஜனவரி, 2014

"கசா"யம்


உழவன் உணவகம் ஊனமுற்றோர்க்கு ஊன்றுகோலென
ஊருக்குதவும் உபகாரம் பெற்ற பிள்ளை...!
உயர்ந்த அதிகாரம் உன்னிடம் உள்ளதா?
உடனே உயர்த்து ஏழையின் வாழ்வை...!

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
கிஞ்சித்துமதை  மதியாதவன் கோணலை நிமிர்த்து...!
கோலாக்காரன் என்ன பெரிய கொக்கா?
கோளாறென்றால் போட்டு விடு பூட்டு...!

அடுத்தவர்க்கு விலையில்லாமல் அளிப்பதல்ல யோசனை
கொடுப்பதற்கு முன் எடுத்துக்காட்டினாய் நீ...!
ஆங்கிலக் கல்வியின் அடிமைகள் மத்தியில்
அரசுப் பள்ளியில் ஆன்றோநின் பிள்ளைகள்...!

வேதனையின் விளிம்பிற்கே உன்னைத் தள்ளினாலும்
"சோதனை"யின் கொம்பை முறித்துச் "சாதனை"யாக்குகிறாய்...!
பசப்பு விருந்து படைக்கும் பாவிகளுக்கு
கசப்பு மருந்தை பரிசாய்க் கொடுக்கிறாய்...!

தன்னிகரில்லா உன் தாய்நாட்டுச் சேவைக்கு
தண்ணியிலாக் காடே நாய்கள்தரும் பரிசு...!
இருபதிற்கும் மேலாக உன் இடமாற்றம்
இருந்தாலும் உன்னிட மில்லை தடுமாற்றம்...!

ஐயோ பாவம்...

சதிகாரச் சண்டாளர்தம் மதிதன்னில் உறைக்கவில்லை
"சகா"யத்தை மாற்றினால் "கசா"யம்தான் கிடைக்குமென்று...!20 கருத்துகள்:

 1. வணக்கம்

  கவிதை சிறப்பாக உள்ளது..மேலும் தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி ரூபன்...!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி தனபாலன்...!

   நீக்கு
 3. எந்தெந்த துறையெல்லாம் நஷ்டத்தில் அல்லது லஞ்சத்தில் உள்ளனவோ அங்கெல்லாம் இவரை உடனடியாக மாற்றச்சொல்லி அரசுக்கு ஒரு தந்தி அனுப்பினால் நல்லா இருக்கும்போல. தொகுதிகளுக்கு இடைத்தேர்த்தல் போல துறைகளுக்கு சகாயம்.
  வீ நீட் மோர் சகாயம்ஸ்.
  ஆல் ஐயேயெஸ் ஆஃபிஸர்ஸ், பிளீஸ் தின்க்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சைதை அஜீஸ் ஐயா...!

   நீக்கு
 4. சோக்கா எய்திக்கிரே கவுஜ நைனா. தூள் டக்கருமா.............த.ம. +

  பதிலளிநீக்கு
 5. ஐயோ பாவம்...

  சதிகாரச் சண்டாளர்தம் மதிதன்னில் உறைக்கவில்லை
  "சகா"யத்தை மாற்றினால் "கசா"யம்தான் கிடைக்குமென்று...!

  அருமை!! இன்னாபா இப்படில்லாம் ஷோக்கா எய்திகினு பேரு ராங்கா வைச்சிருக்கியேபா!! இன்னாபா ரகசியம்?!!!

  த.ம. +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெம்ப டேங்க்ஸ்பா...
   //இன்னாபா இப்படில்லாம் ஷோக்கா எய்திகினு பேரு ராங்கா வைச்சிருக்கியேபா!! இன்னாபா ரகசியம்?!!!//
   இத்த பத்தி தனியா ஒரு இடுகை போட்லாம்னு கீறேம்பா...

   நீக்கு
 6. தங்களுக்கும், தங்கள் குடும்பதினருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...
   லேட்டா சொல்லிக்கினேம்பா...

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரவிந்த் குமார்...!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்...!

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...