சனி, 23 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்


மூக்கைப் பிடித்துக் கொண்டே கூவி அன்றைய விடியலை அறிவித்தது சேவல். கூவம் நதிக்கரை நாகரிகத்தில், சென்னை "நரக"வாசிகள் தூக்கம் கலைந்து அன்றைய விடியலைச் சுவாசித்தார்கள்.

முகத்தில் வெயிலடிக்கும் வரை தூங்கிய கொமாரு, அவசர அவசரமாக எழுந்து, ஜாபர்கான் பேட்டை நோக்கிக் கிளம்பினான். அங்கே, அவனை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த துலுக்காணம், “இன்னா கொமாரு... இம்மாநேரம் கயிச்சு வந்துகின...?” என்று லேசாகக் கோவித்துக் கொண்டான்.

“கோச்சுக்காதபா... நைட்லாம் கொசுக்கடி பேஜாருபா... தூக்கம் கம்மிப்பா...”

“அப்புடிக்கா சொல்றியா... சர்தாம்பா...வுடு...”

பேசிக்கொண்டே வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடைப் பக்கம் நடையைக் கட்டினார்கள்.

காலை நேரப் பரபரப்பு எங்கும் தொற்றிக்கிடந்தது. பளபளவென்று புதுப்பட போஸ்டர்கள் வழியெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. அழுக்குத் துணி மனிதர்கள் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். நேராகக் கடைக்குச் சென்றவர்கள், வழக்கம் போலத் தேநீர் பருகினார்கள்.

“இன்னா கொமாரு அல்லாப் பக்கமும் புச்சா போஸ்டர் ஒட்டிக்கிறான்.... எதுனா நியு மூவியாபா...?”

“இக்கும்பா... நேத்தி கூட நம்ப சேவரு சொல்லிகினாம்பா... அத்தாம்பா... ரெண்டாம் ஒயகமோ... இன்னாமோ...”

“சர்தாம்பா... அப்பக் கெயம்பிக்லாமா...?’

“ஆவட்டும்பா...”

காசைக் கல்லாவில் கட்டிவிட்டு காசித் தியேட்டர் நோக்கி நடையைக் கட்டினார்கள். நூறடிச் சாலை நாறிக்கொண்டிருந்தது. தியேட்டர் வாசலில் ஏகப் பரபரப்பு. டிக்கெட் வாங்கக் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல, சனக் கும்பலில் ஊடுருவி, சிறிய வாசல் வழியே இருட்டில் நுழைந்தார்கள். அங்கே, அவர்களை ஆரவாரமாக வரவேற்றது இரண்டாம் உலகம். பலவிதமான ஒலிகளுக்கிடையே அவசர நடமாட்டங்கள் தென்பட்டன. ஹாலிவுட் கிராபிக்ஸை விஞ்சியிருந்தது அதன் காட்சியமைப்பு.

“நம்ப ஆரிச்சாமி கீறானே... அவன் இஸ்டோரி பெரிய பேஜாராப் பூடிச்சிபா...”

“அப்புடியா... இன்னாபா ஆச்சி...”

“அத்தாம்ம்பா... நம்ப அர்க்காணிய டாவட்ச்சிகினு இர்ந்தானே... அந்த்த மேட்ட்ருபா... கடிசில புட்டுக்கிச்சிபா...”

“ஏம்பா... சோக்காத்தானே போய்க்கினு இர்ந்திச்சி...”

“ஆமாம்பா... அந்த்த அர்க்காணி திடும்னு காணாப் பூடிச்சிபா... அல்லா எடத்திலேயும் தேடிக்கினு... கடிசில எத்தோ வேற ஊராண்ட கண்டுக்கினானாம்பா...”

“ஓஹோ... அப்புடியாபா...”

“இக்கும்பா... கதையைக் கேளு... அங்கன போய் பாத்தாக்க... அந்த அர்க்காணி வேற மாறி கீதாம்பா... நம்பாள கண்டுக்கவே இல்லியாம்பா...”

“அய்யே...!”

“ஆமாம்பா... அப்பால... அந்தூரு பெர்சு கம்மினாட்டி ஒன்னு நம்ப ஆரிச்சாமி லைன்ல கிராஸ் ஆயிக்கினானாம்பா...”

“அய்யே... அப்பால...?”

“அப்பால இன்னா... படா பேஜாராப் பூடிச்சாம்பா...” என்றவனை இடைமறித்த துலுக்காணம்... வழக்கத்துக்கு மாறாக அதிக துர்நாற்றம் வீசுவதை அறிந்து,

“அய்யே... இன்னா கொமாரு... இன்னிக்கி இம்மாங் கலீஜா கீது...?”

“இக்கும்பா... இன்னான்னு தெர்லபா...”

விச வாயுவின் நெடி தாளாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டே இருவரும் முன்னேறினார்கள். அங்கே... தொகுதியில் காணாமல் போன அரசியல் வியாதிகளெல்லாம் கூட்டம் கூட்டமாக அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சமீபத்திய மழையின் காரணமாகப் பாதாள சாக்கடை படு மோசமான நிலையை அடைந்திருந்தது. வழக்கம் போல, அதைச் சுத்தம் செய்யும் பணியில், உயிரைப் பணயம் வைத்து உழைக்க ஆரம்பித்தார்கள் அவர்கள்.

அவர்கள் தலைக்கு மேலே, இவர்களைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, சென்னை "நகர"வாசிகள் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.


10 கருத்துகள்:

  1. வணக்கம்
    படிப்பதற்கு பதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன் அவர்களே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. இன்னாம்மா சொன்னே போ.. சோக்கா இருந்தது நைனா..
    த.ம 5

    பதிலளிநீக்கு
  4. சூப்பரா கீதுப்பா! இம்மாம் பெரிய ஒயகம் இர்க்காச்சே ரெண்டாம் ஒயகம் படா பேஜாருப்பா! (சென்னை "நரக" வாசிகளின் கரையோர சென்னைத் தமிழ் courtesy என்னுடன் சேர்ந்து எழுதும் வலைப்பூ தோழி) நான் உங்கள் சென்னைத் தமிழுக்கு ரசிகன்!. நம்பள்கி யின் பதிவுகளுக்கு நீங்கள் சென்னைத் தமிழில் பதில் கொடுக்க அவர் அதற்கு அதே தமிழில் பதிலுரைக்க, நான் அதை மிக மிக ரசிப்பதுண்டு!! உங்கள் எழுத்துக்களும் மிக அருமை! உங்களைத் தொடர்கிறேன்.! த.ம +1 போட்டச்சுபா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா... நீயும் சோக்காதாம்பா சென்னை டமில் எய்திக்கீற... மெய்யாலுமே சோக்கா கீதுபா...
      அப்பால... சென்னை டமில், நெல்லை டமில் அல்லாமே செம்ம சோக்கா இர்க்கும்பா... நம்ப நம்பள்கி கீறாரே... சென்னை டமில்ல டபிள் கிராஜூட்டுபா... முட்டா நைனா ஜுஜுபி ஒன்னாங்கிளாஸ் தாம்பா...

      நம்ப எழ்த்துக்கு நீ குட்த்த ரெஸ்பீட்டுக்கு டபிள் டேங்க்ஸ்பா...

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...