பிதாவின் பாசம் கரையற்றது
முன்னவர் நேசம் நிகரற்றது
பின்னவர் தியாகம் முடியற்றது
இருவரின் கருணையோ எல்லையற்றது
அளக்க முனைந்தால் அவனியே நோகும்
– இங்கே
அண்ட விதிகள் அடியற்றுப் போகும்
தன்னலம் இவர்தன்னில் தோற்றுப் போகும்
– இவர்
தாய்மையைத் தெய்வங்கள் கடன் வாங்கும்
அம்மா உருவில் சேலை உடுத்திய அப்பா
அப்பா உருவில் வேட்டி உடுத்திய அம்மா
தரணிவாழ் உயிருக்குத் தாயும் தந்தையும்
உருவில் இருவர் அருவில் ஒருவரே!
Tweet | ||||
பிரமாதம் நைனா...
பதிலளிநீக்கு