வெள்ளி, 18 அக்டோபர், 2013

இலையுதிர் காலம்...காட்ட அழிச்சு வீட்டக்கட்டி
நாட்டக் கெடுத்து நாசமாக்கி...
வெளஞ்சு வர்ற வெள்ளாமைக்கும்
வெளிநாட்டு வெசத்த வச்சு...

சத்தான சேத்தக் கெடுத்து
கொத்தாக சோத்தக் கொன்னு...
தாந்தான் இங்கே எல்லாமேன்னு
தாந் தலைலே மண்ணப் போட்டு...

கெடுக்க இங்க ஒன்னுமில்லை
அடுத்து எங்க போலாமுன்னு...
ஓசோன்ல ஓட்டையைப் போட்டு
நாசூக்கா நோட்டம் விடுறான்...

தூர வெளிக் கிரகங்களே
சூதானமா இருந்துக்கங்க...

போனாப் போறான் மனுசப் பய
பொழச்சுப் போவட்டும் அவன் வாரிசுக...
அற்பப் பதரு அவனுக்கும் நீ
சொற்ப புத்தியக் கொடுக்கணும்...

பூமியில் நாங்களும் நெலைக்கணும்
சாமி எங்களைக் காப்பாத்துன்னு...
நெட்டயா நிக்கும் நெடுமரங்க
மொட்ட போட்டு வேண்டிக்குதுக...!


6 கருத்துகள்:

 1. வணக்கம்

  சொல்வது உண்மைதான் விழிப்புணர்வுக் கவிதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்படன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. நைனா, ரொம்பவும் யோசிக்க வேண்டிய விடயம் தான் !!! ஆக மொத்ததில நமக்கு நாம் மொட்டையபோட்டுக்கிட்டாச்சு.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...