ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

ஓட்டா...? துட்டா...? நோட்டா...?ஓங் கட்ச்சில இன்னான்றான்...
“ஓட்டுக்கு நோட்டுடா பேமானி” ன்றான்...!

எங் கட்ச்சில இன்னான்றான்... 
“ஓட்டுக்கு துட்டுடா சோமாரி” ன்றான்...!

எலிக்சன் கமிசன் இன்னான்றான்...
“ஓட்டுக்கு துட்டா...? 

அல்லாம் கெடியாது...
ஒயுங்கா போடுநீ ஓட்ட”
ன்றான்...!


புச்சாக்கீற பார்ட்டி இன்னான்றான்...


“பாலிடிக்ஸ் பார்ட்டிலாம் வுட்றாம்பாரு பீலா
நம்பிட்டேன்னா அப்பாலநீ நொந்துருவ நூலா...
நல்லா நீயும் நென்ச்சுப்பார்றா மொள்ளமாறி
நோட்டுக்கு ஓட்டுமில்ல... ஓட்டுக்கு நோட்டுமில்ல...

ப்ரீயா வெட்டிருவான் பிச்சாத்து மாலு
நெரியா அட்ச்சுருவான் அப்பாலநீ பாரு...
ஒயுங்கா நீயும் ஒர்சிப்பார்றா முடிச்சுமாறி
ஓட்டுக்கு துட்டுமில்ல... துட்டுக்கு ஒட்டுமில்ல...

கடிசீல கேட்டுப் போடா கேப்மாறி
நோட்டாதான் ஓட்டு... ஓட்டுதான் நோட்டா
ன்றான்...!
 

விடிய விடிய கேட்டுக்கினு
உசார் பக்கிரி இன்னான்றான்...
நோட்டா காண்டி போடுன்றேநீ

நோட்டில்லாது எப்டீ...?” ன்றான்...!

மெய்யாலுமே அண்ணாத்தே
கிர்ர்ருங்கிது அல்லாமே...!


“கவுருமண்டு தண்ணி” மேறி
ஒன்னியும் இங்க பிர்ல மாமே...?!
25 கருத்துகள்:

 1. அட!!
  சென்னை செந்தமிழில் கவித...கவித...
  உங்களால்தான் முடியும் நைனா!
  நீ அடிச்வுடு வாத்யாரே!!!

  பதிலளிநீக்கு
 2. ஒண்ணுமே பிரியல மாமு.....

  இதுகாண்டி தான் அரசியல சாக்கடைன்னு சொல்றாங்கோ போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கும்பா... அப்புடிக்காதான் கீதுபா...!

   ரெம்ப டேங்க்ஸ்பா...!

   நீக்கு
 3. பதில்கள்
  1. மொத தபா விசிட்டு பண்ணிக்கின... ரெம்ப டேங்க்ஸ்பா...!

   நீக்கு
 4. வெயில் உச்ச நேரத்தில் பீர் விற்பனை எக்கச்சக்கம்னு போட்டு இருந்தாக ,உண்மைதான் போலிருக்கு !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்த்துக்கும் ஓட்டுக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...!

   நீக்கு
 5. அண்ணாத்தே, மெய்யாலுமே கிர்ர்ருங்க்கீது...

  பதிலளிநீக்கு
 6. அரசியல் குளபடியில் மக்களின் மன நிலை இப்போது இப்படிக் கூட
  இருக்கலாம் :)) ரசித்தேன் வாழ்த்துக்கள் முட்டா நைனா .

  பதிலளிநீக்கு
 7. முட்டையிலிருந்து கோழியா,கோழியிலிருந்து முட்டையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கும்பா... அவ்ளோ சிக்கலாத்தான் கீதுபா...!
   கடையாண்ட வந்து கர்த்து சொல்லிக்கினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...!

   நீக்கு
 8. செம செம பதிவு ,,, நயினா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன்...!

   நீக்கு
 9. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...