கொஞ்சம் கோக்கு மாக்கான கதைதான்... என்னா பண்றது...? வேற வழியில்ல... சொல்லித்தொலைக்க வேண்டியிருக்கு... ஏன்னாக்க... இது நெசமாவே நடந்த கதை... நாஞ்சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க நம்பித்தான் ஆவணும்...
கதையைக் கவனமாக் கேளுங்க மக்கா... ஏன்னாக்க... இதக் கேட்டதுக்கப்புறமா... நீங்க ஒரு பதில் கதையைத் திருப்பிச் சொல்லணும்... என்னா... நாஞ்சொல்றது புரியுதா...?
ஆவட்டும்... இப்பக் கதைக்குள்ளார போவோம்...
குக்குடம்* சமீனுல சமையல் பண்ணுனா வெள்ளக்காயப்பட்டி சமீனுல வாசன வரும். அந்தளவுக்கு நெருக்கமா இருந்துச்சுக ரெண்டு சமீனும். அதுக்காவ ரெண்டு சமீனுக்காரவுகளும் ஒன்னுமண்ணா இருப்பாகன்னு நீங்க நெனச்சுறக்கூடாது. எப்பவும் எலியும் பூனையுமாத்தான் இருப்பாக.
குக்குடம் சமீனுக்குச் சப்பக்கட்டா மஞ்சம்பட்டி சமீனும், வெள்ளக்காயப்பட்டி சமீனுக்குத் தொணையா காரப்பட்டி சமீனும் இருந்துச்சு. இப்புடி இந்தச் சமீனுக ரெண்டுபட்டுக் கெடக்குறதுக்கு என்னா காரணம்னா...? குக்குடம் சோம்பச் சிறுக்கியும், வெள்ளக்காயப்பட்டி கருவாப் புள்ளயும்தான்.
பாண்டிமா ராசா பொண்டாட்டி கூந்தலு, எட்டூருக்கு மணத்துக் கெடந்துச்சுன்னு சொல்லுவாக. ஆனா நம்ப சோம்பச் சிறுக்கி இருக்காளே, அவளுக்கு ஒடம்பு பூரா மணத்துக் கெடக்கும். அவளுக்கு ஒன்னும் எளச்சவ இல்ல நம்ப கருவாப் புள்ள. கொல்லிமல மூலிகைக தோத்துப் போயிரும். அம்பூட்டு வாசனையா இருப்பா இவ.
குக்குடம் மைனருக்கு கருவாப் புள்ள மேல கண்ணு, வெள்ளக்காயப்பட்டி மைனருக்கு சோம்பச் சிறுக்கி மேல கண்ணு. இதுகள வச்சுத்தான், இவுகளுக்குள்ள இருக்குதய்யா தீக்க முடியாத பகை.
ஒரு வாட்டி என்னாச்சுன்னா, நம்ப குக்குடம் மைனரு, பகையாளி வேலியத்தாண்டி... மேய்ச்சலுக்குப் போவ, விசயம் வெவகாரமாயிப் போச்சு. கருவாச்சிய கணக்குப்பண்ணப் போனவரக் கையுங் களவுமாப் புடுச்சுப்புட்டாக வெள்ளக்காயப்பட்டி வகையறா.
பொறவென்ன, ஒரே கலவரமாப்போச்சு. அடுப்புவாயன் வீட்டு மாடில பானவவுறன் தலைமையில கூட்டிட்டாக பஞ்சாயத்த.
இந்த அடுப்புவாயனும் பானவவுறனும் யாருனாக்க... இவுகதான் ரெண்டு சமீனுக்கும் பொதுவான ஆளுக. இதே... மத்தவுக வெவகாரமுன்னா மரத்தடியில கூட்டுவாக பஞ்சாயத்த. ஆனா... இது சமீனு வீட்டு வெவகாரமாவுல்ல போச்சு. அதுனால... அடுப்புவாயன் வீட்டுல கூட்டுனாக பஞ்சாயத்த.
ரெண்டூரு சாதி சனமும் அடுப்புவாயன் வீட்டுல கொதிச்சுப்போயிக் கூடிருச்சு.
ரெண்டு சமீனுக சார்பாவும், மஞ்சம்பட்டி மைனரும் காரப்பட்டி மைனரும் மொதல்ல பேச வந்தாக. பேச்சு ஏச்சாகி... கைகலப்புல முடிஞ்சிருச்சு. அவுக ஒரசுன ஒரசுல அந்த எடமே ரொம்ப சூடேறிப் போச்சு. பதறிப் போனாக பஞ்சயத்தாருக. என்னா பண்ணலாம்னு யோசிச்சி, கடைசில... ஒரு அண்டா தண்ணியக் கொண்டாந்து ஊத்திவிட்டாக அவுக மேல.
உள்ள இந்த நெலமையினாக்க, வெளிய அதவிட மோசமா இருந்துச்சு. சண்டைக் கோழி கணக்கா முறுக்கிக்கிட்டு நிக்கிறாக குக்குடம் மைனரும் வெள்ளக்காயப்பட்டி மைனரும். அவுகள மறிச்சி நிக்கிறாக நாலஞ்சு உள்ளிப்பயலுக. எம்புட்டு மறிச்சும் முடியல, வாய்த் தகராறு கைகலப்பாகி கடைசில, வெட்டுக் குத்துல போயி முடிஞ்சிருச்சு.
குக்குடம் மைனரு, சும்மா நொங்கு சீவுராப்புல சீவிப்புட்டாரு வெள்ளக்காயப்பட்டி மைனர. பதிலுக்கு, வெள்ளக்காயப்பட்டி போட்ட பொட்டுல, கண்டந்துண்டமாயிட்டாரு குக்குடம் மைனரு. இதுல கொடும என்னான்னா... வெலக்கி விடப்போன உள்ளிப்பயலுகளும் நறுவிசா நறுக்குப்பட்டு போயிட்டாய்ங்க.
நெலவரம் ரொம்பக் கலவரமாப் போவவும், பானவவுறனுக்கு வெவரத்தச் சொல்ல ஓடுறான்யா இலவணத்தான்*. அவன் ஓடுறதைப் பாத்த, கண்டந்துண்டாமாப் போன குக்குடம் மைனரு, வெரசன ஓடுறாரு அவன் பின்னாடியே... விடாக்கண்டனாத் தொரத்திகிட்டே ஓடுறாரு வெட்டுப்பட்ட வெள்ளக்காயப்பட்டியாரு... என்னடா இது இம்சையாப் போச்சுன்னு பின்னாலே ஓடுறாய்ங்க உள்ளிப்பயலுக வகையறா...
வெளிய வேடிக்க பாத்த மிச்ச சாதி சனமும் ரொம்பக் கொதிச்சுப்போயி கூடுறாக அடுப்புவாயன் வீட்டுல.
மேல, பானவவுறன் பஞ்சாயத்துல என்னடான்னாக்க, நெலம மேலும் சூடாயிருச்சு. ஏற்கனவே மஞ்சம்பட்டியாரும் காரப்பட்டியாரும் மல்லுக்கு நின்ன எடத்துல, இப்ப குக்குடம் மைனரும் வெள்ளக்காயப்பட்டியாரும் சேந்துக்க, ஒரே கசமுசாவாகிப் போச்சு. இதுக்கு எடையில மாட்டிக்கிட்டு முழிக்கிறாய்ங்கய்யா நம்ப இலவணத்தானும், உள்ளிப்பயலுக வகையறாவும்.
உள்ள இப்புடிக் கூத்து நடக்க, வெளிய என்னடானாக்க, சோம்பச் சிறுக்கியும், கருவாப் புள்ளயும் ஒரு தீர்மானம் பண்ணிப்புட்டாளுக. அது என்னானாக்க, கருவாப் புள்ளயப் பாத்து சோம்பச் சிறுக்கி...
“அடியே இவளே... எதுக்குடியம்மா நமக்குள்ள வம்பு வழக்கு, பேசாம... நம்ப ஒரு காரியம் பண்ணலாம்... குக்குடம் மைனர நீ கட்டிக்க... வெள்ளக்காயப்பட்டி மைனர நாங்கட்டிக்கிறேன்... எல்லாம் ஒன்னுமண்ணாப் போயிறலாம்... நீ என்னாடி சொல்லுற...” ன்னு கேக்க...
“யக்கா... அது என்னக்கா அப்புடிச் சொல்லிப்புட்ட...? நீ சொல்லி நா எதக் கேக்காமே போனேன்... நீ சொல்றாமாறியே... செஞ்சுக்கலாம்க்கா...” ன்னு சம்மதம் சொல்லிப்புட்டா கருவாப் புள்ள...!
பொறவென்ன... சாதி சனமெல்லாம் சந்தோசமாயிப் போச்சு... “பொட்டப் புள்ளகளுக்கு இருக்க புத்தி... அந்தப் பொசகெட்ட பயலுகளுக்கு இல்லாமப் போச்சே...” ன்னு சொல்லி ஆகவேண்டிய காரியத்தப் பாத்தாக.
எள்ளெண்ணையக் காச்சி, சோம்பச் சிறுக்கியயும் கருவாப் புள்ளயயும், அதுல குளுப்பாட்டி... தாலி கட்ட ஏற்பாடு பண்ணுறாக... இவளுக குளிச்ச குளியில... ஊரே மணத்துக் கெடக்குதைய்யா மணத்து...!
இது இப்புடியிருக்க, அங்க பானவவுறன் பஞ்சாயத்துல என்னடானாக்க, ஊத்துன அண்டாத் தண்ணி சுண்டிப் போகவும்... பஞ்சாயம் பேசி முடிக்கவும் சரியா இருந்துச்சு. பேச்சு வார்த்தை முடிவுல... இதுல “யாரு குக்குடம் மைனரு... யாரு வெள்ளக்காயப்பட்டி மைனரு... யாரு இலவணத்தான்... யாரு உள்ளிப்பயலுக வகையறா” ன்னு தெரியாம... ஒன்னுமண்ணாப் போயிட்டாக எல்லாரும்.
கடைசில... ஒன்னுமண்ணாப் போன அவுகளையும்... தாலி கட்டத் தயாரா இருந்த சோம்பச் சிறுக்கியையும் கருவாப் புள்ளையையும்... மொத்தமாக் கூட்டியாந்து... கண்ணாலத்தப் பண்ணி வச்சுட்டாக பஞ்சாயத்தாருக.
இப்புடி... அவுகளுக்குக் கண்ணாலத்தப் பண்ணி வச்சவுக... “அடே போக்கத்த பயலுகளா... இனிமே சமீனுமில்ல... ஒரு மண்ணுமில்ல... எல்லாப் பயலுகளும் ஒண்ணுதான்... அதுனால... இனிமே எல்லாரும்... புதுசாக் கட்டிக்கிட்ட இதுகள... ‘கோ.க.பொ’ ன்னுதான் கூப்புடணும்... என்னா... எல்லாருக்கும் புரியுதா...?” ன்னு கேக்குறாக சாதி சனத்தப் பாத்து...
சாதி சனமெல்லாம்... “அப்பாடா... இனிமே கலவரம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்...” ன்னு நெனச்சுக்கிட்டு... புதுசாக் கட்டிக்கிட்டவுகளக் கொண்டுபோயி... வட்டத்தட்டான் வீட்டுல குடி வச்சுப்புட்டாக...
என்ன மக்கா...? நாஞ்சொல்லிவாரத இன்னும் நீங்க நம்பலைல... நாந்தான் முன்னாடியே சொன்னேனே... இது ஒரு கோக்கு மாக்கான கதைன்னு...
என்னமோ... நாஞ்சொல்றத சொல்லிப்புட்டேன்... அதுக்குமேலயும் ஒங்களுக்கு நம்பிக்க வரலன்னா... நீங்களே போயி... அவுக குடும்பம் நடத்துற அழக... பாத்துத் தெரிஞ்சுக்கங்களேன்...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
என்ன மக்கா...? வந்துட்டிகளா...? இங்க பாருங்க... இவுகதான் நாஞ்சொன்ன கோ.க.பொ...
அட...! என்ன முழிக்கிறீக... இன்னுமா தெரியல... இவுகதான் மேற்படி...
“கோழிக் கறிப் பொரியல்...!!!”
அம்ம்புட்டுத்தேன்... கதை முடிஞ்சு போச்சு...!
இப்ப... நீங்க என்னா பண்ணனும்னாக்க... இந்தக் கதைல... யாரு யாரு வர்றாக... அவுக... எந்தெந்த வகையில சேர்மானஞ் சேந்து... கடைசில... இப்புடிக் “கோழிக் கறிப் பொரிய” லாப் போயிட்டாகன்னு... பின்னூட்டத்துல சொல்லுங்க மக்கா...
பின்னால ஒரு குறிப்பு: மேல பிச்சர்ல கீற கோ.க.பொ... போன நாயித்துக் கெயம... நம்ப கைலேயே செஞ்சிகினதுபா...
அப்பாலிக்கா இன்னோரு பின் குறிப்புபா: குக்குடம்* - ?, இலவணம்* - ? ; நீங்கல்லாம் ரொம்ப புத்திசாலிக... எப்புடியும் இதெல்லாம் கண்டு புடுச்சுருவீகன்னு எனக்குத் தெரியும் மக்கா... அதான்... இதுக்கெல்லாம் நா அருஞ்சொற் பொருளு குடுக்கல... ஏதோ எனக்குத் தெரிஞ்ச வார்த்தைகளச் சொல்லிருக்கேன்... “இதில் ஏதேனும் சொற்குற்றம் பொருட்குற்றம் இருப்பின்... புலவர் பெருமக்கள், தயை கூர்ந்து இந்த அற்பனை மன்னித்து... பிழைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்”னு தாழ்மையோட கேட்டுக்கிறேன்பா...
Tweet | ||||
நைனா! மொய் வைத்து விட்டேன்.
பதிலளிநீக்குஅப்புறம் வந்து சாப்பிடுகிறேன்!
(கருத்து சொல்கிறேன் என்று அர்த்தம்)
ரெம்ப டேங்க்ஸ்பா...
நீக்குமறக்காம வந்து சாப்புடுபா...
சூப்ப்ப்பரு...!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தனபாலன்...!
நீக்குஅட....டா...என்னா ஒரு மொழி நட!.
பதிலளிநீக்குபானவூரான், வட்டத்தட்டான்னு சொன்னப்பவே எனக்கு புரிஞ்சிப் போச்சுது. இது எதோ உள்ள தள்ளுர விசயமுண்டு. அப்படி இல்லென்னாலும்.... உண்மையான சமீன் கதையாவே இருந்தது.
வாழ்த்துகளுங்கோ...!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...!
நீக்குநைனா இன்னாபா உங்க கையால ஒரு கோ.க.பொ செய்ய அதாங்க கோழிக் கறி பொரியல் (நீங்க க்டைசில சொல்றதுக்குள்ளயும் கண்டுபிடிச்சுட்டம்ல!!!) செய்யறதுக்கு இம்மாம் பெரிய கதை டிஸ்கசனு!!! ஆனாலும் கதை ஷோக்காதான் கீதுபா!!! அதான் சமையலுனு //குக்குடம் மைனரு, சும்மா நொங்கு சீவுராப்புல சீவிப்புட்டாரு வெள்ளக்காயப்பட்டி மைனர. பதிலுக்கு, வெள்ளக்காயப்பட்டி போட்ட பொட்டுல, கண்டந்துண்டமாயிட்டாரு குக்குடம் மைனரு. இதுல கொடும என்னான்னா... வெலக்கி விடப்போன உள்ளிப்பயலுகளும் நறுவிசா நறுக்குப்பட்டு போயிட்டாய்ங்க. அடுப்பன்வாயன், சொம்பு, உள்ளி எள்ளெண்ணை, வட்டத்தட்டான், லவணம் (கல் உப்பு), குக்குடம் (கோழி??) எல்லாம் கதை மாதிரி ஒரு சமையல் செய் முறையையே சொல்லிட்டீங்க!! அசாத்தியமான கற்பனைத் திறன்பா!!!! கை குடுங்க நைனா!!! த.ம. போட்டாச்சுபா!!!!
பதிலளிநீக்குரெம்ப டேங்க்ஸ்பா...
நீக்கு//(நீங்க க்டைசில சொல்றதுக்குள்ளயும் கண்டுபிடிச்சுட்டம்ல!!!)//
படா உசார் வாத்யாரே நீ...
இலவணம் (உப்பு) , குக்குடம் (கோழி)... அல்லாம் கரீட்டா கண்டுக்கினியேபா...
நைனா அருமையா சமைப்பீங்க போல!!! பாக்கவே நல்லாருக்குபா!!!
பதிலளிநீக்குகொஞ்ச்சம் கொஞ்ச்சம் தெர்யும்பா...
நீக்குவித்தியாசமா கதை சொல்லிட்டே நைனா சூப்பரு
பதிலளிநீக்குச'மீன் 'வீட்டு கோழிக்கறியிலே மசாலா கொஞ்சம் தூக்கல்தான் !
பதிலளிநீக்கு+1
அப்பத்தான் ரெம்ப டேஸ்ட்டா இர்க்கும்பா...
நீக்குகழுத்தை அறுத்தது நல்லா இருந்தது. நான் படிக்கல.
பதிலளிநீக்குவேறு வழியில்லை ஐயா... "கவுச்சி"க் கதை என்பதால் கழுத்தை அறுக்க வேண்டியதாகப் போய் விட்டது...
நீக்குஆனா... சோக்கா அறுத்துக்கினேன்லபா...
[[பானவவுறனும்]]
பதிலளிநீக்குகுழா வச்ச பானவவுறனும் எனபதே சரி!
கதையும் கோழிக்கறியும்
பதிலளிநீக்குஒண்ணை ஒண்ணு மிஞ்சுது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
(இங்கே குறை சொல்றதுக்கு
புலவர் பெருமக்கள் யாரும் கிடையாது
எல்லாம் நம்ம ஜாதி ஜனம்தான்
ஜமாயுங்க )
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...!
நீக்குtha.ma 8
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா...
நீக்கு