சனி, 7 டிசம்பர், 2013

பல்லு பிச்சை...

த்து காண்டி முட்டா நைனா எய்தி கீச்சதை அல்லாம் பட்சி ரசுச்சுகின அல்லாருக்கும் வணக்கம்பா...!


மொத தபா எய்த சொல்லோ... இம்மா ரெச்பான்சூ இர்க்கும்னு முட்டா நைனா மெய்யாலுமே நென்ச்சுப் பாக்கலேபா...  அல்லாரையும் லைன்லே வந்து பட்சிக்க சொல்லி, கண்ட்ரோலு பண்ணி... கண்ட்ரோலு பண்ணி... முட்டா நைனா படா டயர்டு ஆய்க்கினாம்பா... ஸ்ஸ்ஸ்ஸப்பா... மிடிலபா...

பர்ஸ்ட் ஆளா வந்துகினு, நம்ப இடுகைலாம் பட்சி பாத்து கர்த்து சொல்லி, அப்பால டமில்மணம் மொய்யி வச்சி, இப்புடிக்கா படா சோக்கா நம்பளே என்கரேசூ பண்ணிகீறார்பா நம்ப டிண்டிகல்  தன்பாலு... அவர்காண்டி முட்டா நைனா பெசல் டேங்க்ஸ் சொல்லிக்கிறான்பா...

நம்பளே மாறி அப்ரசண்டுக்லாம்... டமில்மணம் மொய்யி வக்கிற சனநாயகக் கடமே பத்தி... சோக்கா கிளாஸ் எட்த்து... அத்தே டெமான்ஸ்ரேசன்  பண்ணிக் காட்டிக்கினார்பா நம்ப நம்பள்கி வாத்யார்... நம்ப டிண்டிகல் தன்பாலு மாறியே, அல்லா  இடுகையும் பட்சி பாத்து, கர்த்து சொல்லி நம்பளே என்கரேசூ பண்ணிகீறார்பா... அவர்காண்டியும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிறான்பா...

நம்ப எய்த்த பட்சி பாத்து கர்த்து சொல்லிக்கினு, அப்பால... சோக்கான டிப்ப்சுலாம் சொல்லிக்கினார்பா நம்ப பால் கணேசு... அவர்காண்டியும் நம்ப டேங்க்ஸ்பா...

கண்டிணீவா வந்துகினு கர்த்து சொல்லிகிறார்பா நம்ப ரூபன் அண்ணாத்தே... ரெம்ப டேங்க்ஸ் அண்ணாத்தே...

அப்பால, நம்ப எயித்தாளர் கோவை ஆவி... நம்பளே ரெஸ்பீட்டு பண்ணி... மிஸ் பண்ணாம வந்து கர்த்து சொல்லிகிறார்பா... அவர்காண்டியும் ரெம்ப டேங்க்ஸ்பா...

நெக்ஸ்ட்டு, நம்ப  தொள்சிதரன் அண்டு கீதா கீறாங்கப்பா... "ஏய் முட்டா நைனா... நீ சோக்கா டமில் பேசுது... படா சோக்கா ஸ்டோரி சொல்லுது..." அப்புடிக்கான்னு சொல்லி நம்பளே படா குஷி பட்துறாங்கபா... அவ்ங்கலுக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...

அப்பாலிக்கா, நம்ப வூட்டாண்ட வந்து, கர்த்து சொல்லி நம்பளே என்கரேசூ பண்ணிகிற, நம்ப சுரேசு, வி.பி. திரு, மூங்கி காத்து மொர்ளி, நிசாமுதீன், பகவான்சீ (சோக்காளி), கவியாழி கண்ணதாசன் அல்லாருக்கும் ரெம்ப  டேங்க்ஸ்பா...

ரெண்டு பெசல் வி.ஐ.பி  கீறாங்கபா... நம்ப கலாகுமரன் அண்டு பால் கணேசு... வலைச்சரத்துல, "இந்தா மாறி... இந்தா மாறி.. முட்டா நைனா... முட்டா நைனான்னு ஒரு எலக்கியவாதி, படா சோக்கா... ரெம்ப டமாசா எய்தி கீச்சுகினுகீறார்பா... அல்லாரும் போயி பட்சி பாத்து கர்த்து சொல்லுங்கபா" ன்னு இன்றோடசன்  குட்த்துக்கினாங்கபா... ரெம்ப டேங்க்ஸ்பா...

இத்து அல்லாத்துக்கும் மேலே... நம்ப வூட்டாண்ட விசிட்டு குட்த்து... பட்சி பாத்துகினு... கர்த்து ஏதும் சொல்லிக்கிறாமே... சைலண்ட்டா ஜூட்டு வுட்டுகினுகீறாங்களே... அவ்ங்க அல்லாத்துக்கும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

அப்பாலிக்கா, முட்டா நைனா வலை தளம் அண்டு கூகிள் பிளஸ்ல ரிஜிஸ்டரு பண்ணி... நம்பள பாலோ பண்ணிகிறவுங்கலுக்கும், மொகநூலு, டுவிட்டரு அண்டு ஈ-மெயிலு அல்லாத்துலயும் பாலோ பண்ணி(லைக்கு)கிற அல்லாத்துக்கும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

நெக்ஸ்ட்டு... இன்ட்லி, டமில் 10 அண்டு ஆல் திரட்டிகள்லயும், முட்டா நைனா இடுகைக்லாம் ஓட்டு போட்ட அல்லாருக்கும் ரெம்ப ரெம்ப டேங்க்ஸ்பா... 

அப்பால... முட்டா நைனா லிஸ்ட்டுல யாருனா மிஸ் ஆய்க்கினா... மெர்சலாவாதீங்கபா... மிஸ்சான அல்லாத்துக்கும் முட்டா நைனாவோட "மிஸ்சுடு" டேங்க்ஸ்பா...  

ஆவட்டும்பா... இன்னாடா இத்து... இன்னாமோ ஒரு டைட்டிலு குட்த்துகினு... ஒரு லின்க்குமில்லாதே பினாத்திகினுகீரானேன்னு.... மெர்சலாவாதீங்கபா... 

இந்தா ஆச்சிபா... இப்போ... டைட்டில் மேட்டருக்கு வர்வோம்பா...

முட்டா நைனா பிளாக்குக்கு ஐடியா குட்த்து... டெக்கினிக்கல் சப்போர்ட்டு குட்த்து... ஒரு ஒரு தபாவும் இடுகை போட சொல்லோ... அட்டுவான்சா... புரூப்பு  ரீடிங் பண்ணி... எய்த்து பியை அண்டு கர்த்து பியை அல்லாத்தையும் கண்டுக்கினு... பட்டி பாக்க... டிங்கரிங் பாக்க... அல்லாத்துக்கும் எல்ப்பு பண்ணிகினுகீறார்பா...ஓர் பிரண்டு...

அத்து வேற ஆருமில்லபா...  அவுருதாம்பா... நம்ப... 


அவருகாண்டி முட்டா நைனா டபுள் பெசல் டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

அப்பால இத்தே மாறி... அல்லாரும்... முட்டா நைனாக்கு... ஆல் டைம் அம்பும் ஆத்ரவும்  குட்துக்கனும்னு முட்டா நைனா ரெக்கொஸ்ட்  பண்ணிக்கிறாம்ம்பா...

ஆவட்டும்பா... முட்டா நைனா ஜகா வாங்கிக்கிரான்பா...
 
பின் குறிப்புபா: ஒரு ஒரு தபாவும்... முட்டா நைனா இடுகைக்கு... படம் போட சொல்லோ... எல்ப்பு பண்ணிகிற பெஞ்சக் குச்சி, பேப்பரு அண்டு அல்லி லப்பரு அல்லாத்துக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...

அப்பால ஒரு பின் குறிப்புபா: நம்ப இடுகைல, பதிவர்கள் பேர் ஒண்டி சொல்லிக்கினேம்பா... இன்றோடூஸ் பண்ண "லிங்கு சாமி"லாம் குட்க்லபா... அத்து ஏன்னு... மல்லாக்கப் பட்த்து... நீங்களே ரோசனை பண்ணிப் பாத்துகினுங்கபா...

அப்பாலிக்கா இன்னோரு பின் குறிப்புபா: இத்தெல்லாம் இஸ்ட்ரில வந்து... ஆலிவுட்ல படமா எட்த்து... ஆஸுகாரு அவார்டுலாம் குட்ப்பாங்கனு... நம்ப  துல்க்கானம் சொல்லிக்கினாம்பா...   

11 கருத்துகள்:

  1. முதலில் நன்றிகள் பல...

    யம்மாடி... சென்னைக்கு போயிட்டு வந்தது போல் இருந்தது...

    அனைவரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னது சிறப்பு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வூட்டாண்ட வந்து கர்த்து சொல்லிகினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  2. நைனா படா டேங்க்ஸ்பா! நம்மள கண்டுகினதுக்கு! ஷோக்கா கீதுப்பா ரைட்டிங்கு! "பின் குறிப்புபா: ஒரு ஒரு தபாவும்... முட்டா நைனா இடுகைக்கு... படம் போட சொல்லோ... எல்ப்பு பண்ணிகிற பெஞ்சக் குச்சி, பேப்பரு அண்டு அல்லி லப்பரு அல்லாத்துக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா..." நீங்களே தான் படம் போடுகின்றீர்களா?!!!! நாங்கள் அதைப் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தோம். படங்கள் எல்லாம் ரொம்ப ஸூப்பர்!!! நல்ல கலைத் திறமையும் உங்கள் கையில் என்று சொல்லுங்கள் நைனா!!!!!!

    வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா..
      இக்கும்பா... படம்லாம் நம்ப கைலே போட்டதுபா... பொரபசனல் ரேஞ்சுக்கு இல்லாங்காட்டியும்... ஏதோ நம்பளால முட்ஞ்சதுபா...

      நீக்கு
  3. அல்லாம் போட்டாச்சு...போட்டாச்சு!!!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  4. ஷோக்கா எழுதிகிறப்பா.உனக்கு எல்ப் பண்ண பல்லு பிச்சைக்கு டாங்க்ஸ் சொல்லாம்னு நீ குட்த கனேக்சன்ல போய் பாத்தனா! மனுசன் எங்கியோ எஸ்கேப் ஆயிட்டாரு போல கீது என்னான்னு விசாரிப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லு பிச்சை கடை ஒண்டிதான் வச்சிகினு கீறார்பா... இன்னும் யாவாரம் ஆரம்பிக்கலபா...

      நீக்கு
  5. அப்பறம் நம்ம கொமாரு சரோசா லவ் மேட்டரை நாலு மாசத்துக்கு முன்ன எழுதனம்பா. அதுக்கு ப்ரைஸ் கூட குடுத்தாங்க. கனெக்சன் குடுக்கிரன். டைம் கெடைக்க சொல்ல வந்து பட்சி பாரு நைனா

    கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -போட்டி

    பதிலளிநீக்கு
  6. நைனா!
    முதிலில் உங்களுக்கு தமிழ்மணம் +1 என்ற மொய்!
    நீங்க, அர்ஜெண்டா என் "அல்லா தான் முதல் & ஒரே கடவுள்: மீதி எல்லாம் ஒன்னும் இல்லா!" என்ற இடுகைக்கு ஒரு +1 வோட்டு போட்டு தமிழ்மணம் மகுடம் ஏற்றுங்கள்;

    தமிழ்மணம் வோட்டுகள் எனது இடுகைக்கு ஆறு தான் இருக்கு; எழாவது வோட்டு போட்டால் தான் தமிழ்மணம் மகுடம் ஏறும்! எழாவது வோட்டு போட்டு தமிழ்மணம் மகுடம் ஏற்றுங்கள்!---அப்புறம் தான் என் கச்சேரி!

    நீங்க "பல்லு பிச்சை" என்று போட்ட இந்த இடுகைக்கு நான் என் "வோட்டு பிச்சையை" எடுக்கிறேன். மற்றவர்கள் திரைமறைவில் வோட்டு வாங்கும் வேலையை நான் பப்ளிக்காக செய்கிறேன். அது ஒன்று தான் வித்யாசம்.

    என் அடுத்து பதிவ இது தான் அதற்க்கு உங்கள் தமிழ்மணம் வோட்டு போடவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!

    அந்த இடுகை இது தான்..
    1+1 = 2
    one plus one is two
    But, one into one is one
    இது என்ன கொடுமை சரவணா?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...