வெள்ளி, 27 செப்டம்பர், 2013

அன்னையும் பிதாவும்...


அன்னையின் அன்பு அளவற்றது

பிதாவின் பாசம் கரையற்றது

முன்னவர் நேசம் நிகரற்றது

பின்னவர் தியாகம் முடியற்றது

இருவரின் கருணையோ எல்லையற்றது

அளக்க முனைந்தால் அவனியே நோகும் – இங்கே

அண்ட விதிகள் அடியற்றுப் போகும்

தன்னலம் இவர்தன்னில் தோற்றுப் போகும் – இவர்

தாய்மையைத் தெய்வங்கள் கடன் வாங்கும்

அம்மா உருவில் சேலை உடுத்திய அப்பா

அப்பா உருவில் வேட்டி உடுத்திய அம்மா

தரணிவாழ் உயிருக்குத் தாயும் தந்தையும்

உருவில் இருவர் அருவில் ஒருவரே!


Related Posts Plugin for WordPress, Blogger...