வல்கோனாவக் கண்டுபுடிச்ச சந்தோசத்துல நேரம் போனதே தெரியல. நாயித்துக்கெழம மத்தியானம் முடிஞ்சுபோச்சு. ஆட்டம்பாட்டம்லாம் முடிஞ்சு பேரப்புள்ள ஊருக்குக் கெளம்பத் தயாராய்ட்டான். மக வீட்டார அனுப்பிட்டு வரலாம்ன்னு பெரியபட்டிக்குக் கெளம்புனாரு பலவேசம்.
வழக்கம்போல, பேரனக் கொஞ்சி, புள்ள குட்டிகள அனுப்பி வச்சுட்டு, அவுக போன தெசயவே கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டு நின்னவரு, சரி... வீட்டுக்குக் கெளம்பலாம்னு திரும்புறாரு... மூட்ட முடிச்சத் தூக்கிக்கிட்டு எதுக்க வருதுகைய்யா சின்னப்பாண்டி குடும்பம்.
சின்னப்பாண்டியப் பாத்ததும், ஏதோ சேக்காளியப் பாக்குற சின்னப் பய மாறி சந்தோசமா ஓடுனாரு அவங்கிட்ட.
“எலே சின்னப்பாண்டி... வல்கோனான்னா என்னான்னு கேட்டீல... அப்புடின்னா என்னான்னு தெரியுமாடா...?” ன்னாரு சந்தோசமா...
வாத்தியாரப் பாத்ததும் சந்தோசப்படுறதுக்குப் பதிலா அழுக வந்துருச்சு சின்னப் பாண்டிக்கு. துக்கம் தொண்டைய அடைக்க, கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு நிக்கிது...
“மொதல்ல அது வல்கோனா இல்லடா... அதுக்கு பேரு வல்கனோடா... அப்புடீன்னா எரிமலைன்னு அர்த்தம்டா... அதாண்டா... நம்ப சமூக அறிவியல் பாடத்துல கூட இருக்குல்லடா... அதாண்டா அது...” ன்னு உற்சாகமா சொல்லி வர்றாரு.
நாயமாப் பாத்தாக்க, இதக் கேட்டதும் துள்ளிக் குதிக்க வேண்டிய பய கேவிக் கேவி அழுவுறான்...
பக்குன்னு போச்சு பலவேசத்துக்கு...
“எலே... என்னடா ஆச்சு... ஏண்டா அழுவுற...?” ங்கிறாரு பதட்டத்தோட...
“சார்...” ன்னு சொன்னவனுக்கு அதுக்கு மேல வார்த்த வர்ல... மனச உருக்குற பாரத்த வெளிய உருவிப் போட்டு அழுவுறான் பய.
பலவேசத்துக்கா ஒன்னும் புரியல... கொழப்பமா பாக்குறாரு அவுக அப்பா அம்மாவ... பய அழுவுறதப் பாத்து, தாம்பங்குக்கும் மூக்கச் சிந்துது அவுக அம்மா... இதென்னடா இம்சையா இருக்குன்னு சங்கட்டமா நெளியிறான் அப்பங்காரன்.
“என்னடா ஆச்சு... சொல்லிட்டு அழுவுடா...” ன்னு அதட்டாலாக் கேக்குறாரு பலவேசம்.
“சார்... அது வந்து சார்... ஊருக்குப் போறோம் சார்...” ன்னு தெணறித் தெணறிச் சொல்லுறான் பய...
“ஊருக்குத்தாண்டா போற.... அதுக்கு எதுக்குடா அழுவுற...?”
“இல்ல சார்... ஊர விட்டே போறோம் சார்...” ன்னு சொல்லிட்டு கேவிக் கேவி அழுவுறான்...
அதுந்து போயிட்டாரு பலவேசம்... “என்னது...? ஊர விட்டுப் போறீங்களா...?”
அதுக்கு மேல ஒன்னும் பேச முடியல சின்னப்பாண்டியால... அழுதுக்கிட்டே அம்மாக்காரியப் பாக்குறான்...
“என்னாத்த சொல்றது...” ன்னு புருசங்காரனைப் பாக்குறா அவ..
“யாராவது சொல்லித் தொலைங்களே...” ங்கிறாரு காட்டமான பலவேசம்...
“இல்லைய்யா... வேலை வெட்டி கெடைக்காம... காவயித்துக் கஞ்சிக்கு வழியில்லாம... இந்த ஊருல இருக்குறதக் காட்டியும்... பேசாம வெளியூருக்குப் போயி... எதுனா வேல செஞ்சு பொழச்சுக்கலாம்னு... இந்த மனுசன்... வம்படியாக் கூட்டிக்கிட்டு போவுதுங்க...” ன்னு பொத்தி வச்ச சோகத்த பொங்கிப்புட்டா ஆத்தாக் காரி...
இடி விழுந்த மாறி இருந்துச்சு அவருக்கு.... வாயடச்சுப் போனவரு ஏறெடுத்துப் பாக்குறாரு அப்பங்காரன...
“ஆமங்கைய்யா... ஒங்களுக்கே தெரியும்... சுத்து வட்டாரத்துல சேந்தாப்புடி வேலை கெடைக்க மாட்டேங்கிது... புள்ள குட்டிகள வச்சுக்கிட்டு ரொம்பச் செரமமா இருக்கு... அதான்... ஆந்துராவுல முறுக்குக் கம்பேனில வேலைக்குப் போலாம்னு போறோம்யா... என்ன பண்றது...?” ன்னு சொன்னான் ஆத்தமாட்டாம...
“அப்ப... சின்னப்பாண்டியோட படிப்பு...?” ன்னு மனசுக்குள்ள மின்னல் மாறி வெட்டுது கேள்வி...
வல்கோனா விசயத்த சந்தோசமா சொல்லலாம்னு வந்தவருக்கு... வாழ்க்கையோட வலிய சொல்லாமப் புரியவச்சுப்புட்டான் சின்னப்பாண்டி...
என்ன சொல்றதுன்னே தெரியாம... பரிதாபமா பாத்தாரு சின்னப்பாண்டிய...
“நானும் முறுக்குக் கம்பேனில வேலை செய்யணும்னு அப்பா சொல்றார் சார்... ஏன் சார்... அந்த வேலை ஈசியா இருக்குமா சார்...? அந்த ஊருல பள்ளிக்கூடம்லாம் இருக்குமா சார்...? நான் வேலை பாத்துக்கிட்டே படிக்க முடியுமா சார்...? எங்க வீட்டுல படிக்க அனுப்புவாகளா சார்...?” ன்னு ஏக்கத்தோட கேக்குறான் அடுக்கடுக்கா கேள்விகள...
நெஞ்சுக் கூடு வெந்து போச்சு பலவேசத்துக்கு... ஆயிரம் ஈட்டியக் கொண்டு ஈரக்கொலையில குத்துறமாறி இருக்கு... புத்தகப் பைய கைல இறுக்கிப் புடிச்சுக்கிட்டு, திக்கத்து நிக்கிறவனப் பாக்குறாரு... ஒரு கணம்... அவரோட பேரனைப் பாக்குறா மாறியே இருக்கு...
“ஏன் சார்... நான் அங்க போயிட்டா... யாருக்கிட்ட சார் சந்தேகம்லாம் கேப்பேன்... ஒங்கள மாறி சொல்லித்தர எனக்குன்னு அங்க யாரு சார் இருக்கா...?” ன்னு அவன் கேட்டதுதான் தாமசம்... “படீர்...” ன்னு ஒரு நரம்பு அந்துபோச்சு அவரு இருதயத்துல...
அப்புடியே மடங்கி விழுந்து... சின்னப்பாண்டியக் கட்டி அணைச்சுக்கிட்டாரு பலவேசம்...
பொழுசாய கூட்டுக்குத் திரும்புற காக்கா குருவில்லாம் இந்தக் கூத்தப் பாத்து கதறிக்கிட்டே போவுதுக...!
காப்பருச்சை விடுமுறை மாறி சுருக்கா கழிஞ்சு போச்சு ஆறு மாசம்... பலவேசம் வாழ்க்கைதான் எப்புடி மாறிப்போச்சு...? காலங்காலமா கடைபுடிச்சு வந்த கரட்டுப்பட்டி கல்விக் கொள்கையை தலையச் சுத்தித் தூக்கிப் போட்டுட்டு... “எந்தெந்த வகையில எப்புடில்லாஞ் சொல்லிக் குடுக்கலாம்...” ன்னு எப்பயும் யோசிச்சுக்கிட்டே இருக்கு மனசு... இப்பல்லாம் அவரு, பசங்களுக்கு வெறும் பாடம் மட்டும் சொல்லிக்குடுக்குறது இல்ல, பொது அறிவையும் சேத்தே சொல்லிக்குடுக்குறாரு. பொது அறிவு சம்பந்தப் பட்ட விசயங்கள்லாம் தேடித் தேடி தானும் படிக்கிறாரு.
மனசு நெறஞ்சு கெடக்கு... இப்பத்தான் புதுசா வாத்தியாரு வேலைக்கு வந்தாமாறி இருக்கு. இன்னும் நெறைய வருசத்துக்கு பசங்களுக்கு சொல்லிக் குடுக்கனும்னு ஆசை ஆசையா இருக்கு.
அதுமட்டுமில்லாம, கரட்டுப்பட்டி பள்ளிக்கூடத்தையே தலைகீழா மாத்திப்புட்டாரு பலவேசம். ஊருல இருக்க எல்லாப் புள்ளைகளையும் கண்டிப்பா பள்ளிக்கூடத்துல சேக்கனும்னு, ஊர்ப் பஞ்சாயத்தக் கூட்டி உத்திரவு போடவச்சிட்டாரு.
பெரிய உத்தியோகத்துல இருக்க மருமகப்புள்ளய வச்சு, பஞ்சுமில்லு நிர்வாகத்துல பேசி, வேலைக்கிப் போன சின்னப் புள்ளைங்கள எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வரவச்சிட்டாரு. சுத்துவட்டாரத்துல இருக்க தொழிற்சாலைகள்ல பேசி, கரட்டுப்பட்டி ஆளுகளுக்கு வேலைவாங்கிக் குடுத்துட்டாரு. மகளிர் சுயஉதவிக் குழு மூலமா ஊருல இருந்த பெண்டுகளுக்கு சுயதொழில் கத்துக்க ஏற்பாடு பண்ணிட்டாரு. இதுக்கப்புறமா, எந்த ஒரு குடும்பமும், கொத்தடிமையா வெளியூருக்கு வேலைக்குப் போகாத அளவுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. ஏற்கனவே, கொந்தடிமையா போனவுகள, மீட்டுக் கொண்டுவர மாவட்ட ஆட்சியரு மூலமா ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு.
“ஒரு சாதாரண பள்ளிக்கூட வாத்தியாரான நம்பளால இவ்ளோ தூரம் செய்ய முடியுதா...?” ன்னு அவருக்கே ஆச்சிரியமா இருக்கு. எங்கருந்து தனக்கு இவ்ளோ பலம் வந்துச்சுன்னு இன்னைய வரைக்கும் அவருக்கு புடிபடல. சத்தமில்லாம ஒரு பெரிய புரட்சி பண்ணினவர, சமுதாயமும் இப்பத் திருப்பிப் பாக்குது. தடங்கலாயிப் போன “தேசிய நல்லாசிரியர் விருது” தானா வந்துருச்சு அவரத் தேடி...!
இவ்ளோக்கும் காரணம்...?
“சின்னப்பாண்டி கேட்ட கேள்வியும்... அவரோட தேடலுந்தான்...” னும் சொன்னா அது நெசமில்லாம வேறெயா இருக்குமா என்ன?
அப்ப... சின்னப்பாண்டி....?
அவங்கேட்ட அந்த ஒரு கேள்விதான்... அவன் வாழ்க்கைய எப்புடி தலைகீழா திருப்பிப் போட்டுருச்சு..?!!!
புது எடம்... முன்ன இருந்ததுக்கும் இப்பைக்கும் எவ்ளோ வித்தியாசம்...?!!!
இருக்க ஒரு நல்ல எடம்... நல்ல சோறு... நல்ல துணிமணிக... இத்தனைக்கும் மேல... இந்தா... பலவேசம் வாத்தியாரு கூடவே பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வர்ற பாக்கியம்...! புதுப்புது புத்தகங்க...! பலவேசம் வாத்தியாரு பேரப்புள்ளகூட சிநேகிதம்...!
“நம்ப ஏண்டா இந்த வீட்டுல வந்து பொறந்தோம்...? பேசாம ஒரு பணக்கார வீடாப் பாத்து பொறந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்...? இந்நேரம் இங்லீசு பள்ளிக்கூடத்துல படிச்சுக்கிட்டு இருக்கலாம்... நம்பளும் நல்ல துணிமணி, சூ, டைலாம் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போவலாம்... பளபளன்னு புத்தகம் வாங்கிப் படிக்கலாம்... நல்ல சாப்பாடு கெடைக்கும்... அப்பா அம்மா நம்பள திட்டாம அடிக்காம இருப்பாக...” ன்னு முன்ன நெனச்சுப் பாத்துருக்கானே... அதே மாறில்ல இப்ப ஒன்னொன்னா நடந்துக்கிட்டு இருக்கு...?!!!
“எங்கயோ ஆந்துராவுல... ஒரு முறுக்குக் கம்பேனில... படிக்கணுங்கிற ஏக்கத்த மனசுல சொமந்துக்கிட்டு... அடுப்புல வெந்து... அடிபட்டு... மிதிபட்ட ரணத்த ஒடம்புல சொமந்துக்கிட்டு... ஒரு நடபொணமா இருந்துருக்க வேண்டிய பய... இப்புடி பவுசா இருக்கமே...? இது கனாவா... இல்ல நெசமா...?” ஒன்னும் புடிபடல சின்னப்பாண்டிக்கு...!
இந்தா... அவுக அம்மா...
ஆசுமாவுக்கு சிகிச்சை எடுத்துக்கிது நல்ல மருத்துவமனையில...
“மூத்த புள்ளைக ரெண்டுந்தான் படிக்காமப் போச்சு, சின்னப்பாண்டியவாவது நல்லா படிக்க வச்சு பெரிய வேலைக்கி அனுப்பிறணும்...” ன்னு எம்புட்டு ஆசப்பட்டுச்சு... இப்ப... அதுக்குத்தான் எம்புட்டு சந்தோசம்...!!!
இந்தா... அவுக அப்பா...
“இக்கரைக்கு அக்கரை பச்சை ங்கிற கணக்கா... இங்க இருந்து கருமாயப்படுறதக் காட்டியும், பேசாம வெளியூருப் பக்கம் போயி, வேற எதுனா வேலையைப் பாத்துப் பொழச்சுக்கலாம்...” ன்னு தவதாயப் பட்ட மனுசன்...
இப்ப... இந்தா... “மாடென்ன கண்ணென்ன... தொட்டமென்ன தொரவென்ன... வெள்ளாமயென்ன வெளச்சலென்னா...” ன்னு மூத்தபுள்ளைய கூட வச்சுக்கிட்டு... எம்புட்டு உற்சாகமா... வேல பாத்துக்கிட்டு இருக்காரு...!!!
ஆமா... பின்ன... பெரியபட்டியில... பண்ணையாளு பெரியசாமிக்குப் பதிலா... இப்ப பலவேசத்தோட பண்ணையத்தப் பாத்துக்குறது இவுகதான...?!!!
இந்தா... ஆடிமாசக் காத்துல அடிச்சுக்கிட்டுப் போற தூசிக மாறி... அடுத்த அஞ்சு வருசமும் ஓடிப்போச்சு...!
நடந்து முடிஞ்ச பத்தாப்புப் பரிச்சையில... “மாநிலத்துலையே மொத மதிப்பெண் வாங்கி... பெரியபட்டி பள்ளிக்கூடத்துக்கே பெருமை சேத்துருக்கான்...” ன்னு எல்லாரும் பாராட்டிக்கிட்டு இருக்காகளே... அது யாருன்னு நெனைக்கிறீக...? வேற யாரு...? நம்ப... சின்னப்பாண்டி தான்...!!!
குடைச்சல் முற்றும்...
Tweet | ||||
அலோ... மைக் டெஸ்டிங்... ஒன்... டூ... த்ரீ...
பதிலளிநீக்குஅனைத்து பாகங்களும் அருமையாக இருந்தது. நீங்கள் வேறொரு முடிவென்று சென்றவாரம் குறிப்பிடும்போதே நான் நினைத்தேன் முடிவு இப்படித்தானிருக்கும் என்று... மிகவும் அருமை. மீண்டுமொரு தொடருடன் வெகு சீக்கிரத்தில் வாருங்கள்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வினோத் அவர்களே...!
நீக்குஆவட்டும்பா... அப்புடிக்காவே செஞ்சுக்லாம்பா...
அடாடா... சின்னப்பாண்டிய பரீட்சைல முதலிடத்துல பாஸ் பண்ண வெச்சு, பலவேச வாத்தியாருக்கும் நல்லாசிரியர் விருது வாங்கிக் குடுத்து. ஒரு கிராமம் முன்னேறதுன்றதைச் சொல்லி... சுபமான முடிவு ஸோக்காத்தான் கீதுப்பா நைனா. அருமையா கதை சொன்னதுக்கு கை குட்த்து பாராட்டிக்கினு, ஓட்டப் போட்டுப்புட்டு ஜுட் ஆவுறேன். வர்ட்டா......
பதிலளிநீக்குதொடர்ந்து படித்து கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கமளித்த தங்களுக்கு மிக்க நன்றி வாத்யாரே...
நீக்கு+1
பதிலளிநீக்குஅல்லாம் போட்டாச்சு!---இது எப்புடி இருக்கு?
சோக்கா கீதுபா...!
நீக்குரெம்ப டேங்க்ஸ்பா...!
பலவேசம் மாதிரி வாத்தியார்கள் ஊருக்கு ஊர் பாடுபட்டால் ,அய்யா அப்துல் கலாம் சொன்னது போல் நாடு வல்லரசு ஆகிவிடும் !
பதிலளிநீக்குத ம +4
கரீட்டா சொல்லிக்கினபா...!
நீக்குரெம்ப டேங்க்ஸ்பா...
இது போல் முடிவைத் தான் எதிர்ப்பார்த்தேன்... கதையில் கூட சோகம், விரக்தி, புலம்பல், etc, எதற்கு...?
பதிலளிநீக்குஆமாம், இந்த படங்கள் எல்லாம் யார் வரைந்தது...? அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
இக்கும்பா... அதுக்காண்டிதான் இப்புடிக்கா கேப்பியா முட்ச்சுக்கினோம்...
நீக்குஅல்லாம் நம்ப கையாலே போட்டுக்கினதுபா...! பாராட்டுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...
மிகவும் அருமையான ஒருமுடிவு! இந்த நாட்டின் கல்விக்குத் தேவையான விஷயத்தை வெகு அனாயாசமாக யதார்த்தமான ஒரு கதையினூடே சொல்லி விட்டீர்கள்!
பதிலளிநீக்குபல வரிகள் மனதை வருத்தியது! உதாரணமாக முதலில் சின்னப்பாண்டி படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்குப் போகும் சூழல் ஏற்பட்ட போது! பின்னர் எல்லமே தலைகீழாகி....இது போன்ற ஒரு சூழல் இங்கு ந்டைமுறையில் வராதா என்ற ஏக்கத்தையும் வரவழைத்ததென்னவோ உண்மைதான்!
த.ம.
தொடர்ந்து வந்து தங்கள் தரும் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ஐயா...!
நீக்குசின்ன பாண்டியின் ஒரு சிறு கேள்வி வாத்தியாரை மட்டுமல்ல அந்த ஊரையே திருத்திவிட்டது! சுபமாக மகிழ்வாக கதை நிறைவு செய்தமை சிறப்பு! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதொடரும் தங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ஐயா...!
நீக்குபோன எபிசோட் ல பண்ணையாளை இதுக்கு தான் வெரட்டிவிடீன்களா?
பதிலளிநீக்குமைதிலி ஹாப்பி அண்ணாச்சி!
க. க. க. போ...
நீக்குகண்டினிசா கிளாசுக்கு வந்துக்கினதுக்கு ரெம்ப டேங்க்ஸ் டீச்சர்...!
த.ம.7
பதிலளிநீக்குநல்ல கதையமைப்பு! ஆனால்....
"நல்ல கதையமைப்பு... ஆனால்... சீக்கிரமாக முடித்துவிட்டீர்களே...?" என்றுதானே கேட்கின்றீர்கள் டீச்சர்...?
நீக்குரொம்ப சந்தோஷமான முடிவு நைனா....
பதிலளிநீக்குஊருக்கு ஒரு பலவேசம் வாத்தியார் கிடைத்துவிட்டால்....
ரெம்ப டேங்க்ஸ்பா...
நீக்குஇக்கும்பா... ரெம்ப சோக்கா இர்க்கும்பா...!
முட்டானா நைனா. முடிவு அட்டாகசம். அப்படியே மனதை நெகிழ வைத்து விட்டீர்கள். நானும் கல்வித் துறையை சேர்ந்தவன் என்பதால் ரசித்துப் படித்தேன். நான் விரும்பிய கதைகளில் இதுவும் ஒன்று. உங்களுக்கென்று தனி எழுத்து நடை உள்ளது. நல்ல படைப்புகளை தர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதொடரும் தங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி முரளிதரன்...!
நீக்குஒரு சிறு வார்த்தையை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் (எட்டு எபிஸோட்ஸ்) கொண்டுசென்றதுமட்டுமின்றி பலருடைய வாழ்க்கை முறைகளையும் மொழி நடைகளையும் தொழிலமைப்புகளையும் நாட்டு நடப்பையும் கூறி ஒரு இனிய முடிவுடன் முடித்தது நெஞ்சை சந்தோஷமாக்கியது முட்டாநைனா. பாராட்டுகள்! வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குதொடரும் தங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சைதை அஜீஸ் அவர்களே...!
நீக்குரொம்ப ஜூப்பரா இருந்துச்சுப்பா கதை.
பதிலளிநீக்குகதையை நல்லாவே சொன்னப்பா.
ஆமா அடுத்த கதை எப்போதுப்பா???
ரொம்ப டேங்க்ஸ்பா...
நீக்குகுட்டியா ஒரு கேப்பு விட்டு சொல்லிர்லாம்பா...
பதிலளிநீக்குவணக்கம்!
நல்ல தமிழ்இருக்கத் தொல்லை நடையேனோ?
மெல்ல உணா்க விழைந்து!
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...!
நீக்குதாங்கள் குறிப்பிடும் "தொல்லை நடை" இங்கு பதிவிடப் படும் இடுகைகளிலா...? அல்லது நான் உபயோகப் படுத்தும் மறுமொழிகளிலா என்று எனக்கு விளங்கவில்லை... (அதனால்தான் நான் இன்னும் முட்டாளாக இருக்கின்றேன்... :-) ) எதுவாகிலும் தங்கள் அறிவுரையின்படி திருத்திக்கொள்ள முயல்கிறேன் ஐயா...!
சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி...!
வணக்கம் இன்று தான் தங்களின் தளத்தினில் இணைந்துகொள்ள முடிந்தது
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி விரைவில் இக் கதையினை நானும் படித்து மகிழ்வேன் .மிக்க
நன்றி பகிர்வுகளுக்கு .
தங்கள் வருகைக்கு முதற்கண் என் நன்றிகள்...! தொடர்ந்து தாங்கள் தரப்போகும் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல....!
நீக்குவெகு நாட்களுக்குப்பின் ஒரு நல்ல கதையை வாசித்த அனுபவம் கிட்டியது. வாழ்வின் முக்கியமான திருப்பங்களில் எனக்கும் "பலவேசம் & சின்னபாண்டி" போல சிலர் கிட்டியதால்தான், காரில் சென்று கொண்டே அலைபேசி மூலம் இந்த இடுகையை இட முடிகிறது என்பதை நினைத்து நெகிழ வைத்தது உங்களுடைய எழுத்து. தொடர்ந்து எழுதுங்கள் Hats off !!!
பதிலளிநீக்கு