ஓங் கட்ச்சில இன்னான்றான்...
“ஓட்டுக்கு நோட்டுடா பேமானி” ன்றான்...!
எங் கட்ச்சில இன்னான்றான்...
“ஓட்டுக்கு துட்டுடா சோமாரி” ன்றான்...!
எலிக்சன் கமிசன் இன்னான்றான்...
“ஓட்டுக்கு துட்டா...?
அல்லாம் கெடியாது...
ஒயுங்கா போடுநீ ஓட்ட” ன்றான்...!
புச்சாக்கீற பார்ட்டி இன்னான்றான்...
“பாலிடிக்ஸ் பார்ட்டிலாம் வுட்றாம்பாரு பீலா
நம்பிட்டேன்னா அப்பாலநீ நொந்துருவ நூலா...
நல்லா நீயும் நென்ச்சுப்பார்றா மொள்ளமாறி
நோட்டுக்கு ஓட்டுமில்ல... ஓட்டுக்கு நோட்டுமில்ல...
ப்ரீயா வெட்டிருவான் பிச்சாத்து மாலு
நெரியா அட்ச்சுருவான் அப்பாலநீ பாரு...
ஒயுங்கா நீயும் ஒர்சிப்பார்றா முடிச்சுமாறி
ஓட்டுக்கு துட்டுமில்ல... துட்டுக்கு ஒட்டுமில்ல...
கடிசீல கேட்டுப் போடா கேப்மாறி
நோட்டாதான் ஓட்டு... ஓட்டுதான் நோட்டா” ன்றான்...!
விடிய விடிய கேட்டுக்கினு
உசார் பக்கிரி இன்னான்றான்...
“நோட்டா காண்டி போடுன்றேநீ
நோட்டில்லாது எப்டீ...?” ன்றான்...!
மெய்யாலுமே அண்ணாத்தே
கிர்ர்ருங்கிது அல்லாமே...!
“கவுருமண்டு தண்ணி” மேறி
ஒன்னியும் இங்க பிர்ல மாமே...?!
